தெய்வங்கள்

தெய்வங்கள்

தோல்வியில்லைத் தொடர்ந்திடு

அழுகின்ற குரலென்றும்
அடங்காமல் முடியாது
அடக்குமுறை எந்நாளும்
அறவழியாய் ஆகாது

துடிக்கின்ற உயிரென்றும்
துணையின்றிப் போகாது
துன்பமே எல்லோர்க்கும்
வழித்துணையாய்  மாறாது

விழுகின்ற நொடிஎல்லாம்
விரல்துடிக்க மறவாது
விழுந்தாலும் மனதால்
வீழ்த்திவிட முடியாது

தோற்றதாய் சொன்னாலும்
துவண்டுவிட முடியாது
தோல்வியை தொடர்ந்தவன்
வெற்றிபெற தடையேது

மீண்டும் மீண்டுமென
மகிழ்ச்சியாய் துவங்கிடு
தாண்டுமுயரம்த் தடுத்தாலும்
தோல்வியில்லைத் தொடர்ந்திடு



Comments

  1. தோல்வி இல்லாமல் வெற்றி ஏது...? அருமை...

    தன்னம்பிக்கை வரிகளுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.என்னாலான முயற்சி

      Delete
  2. ///தோற்றது தோல்வி அல்ல...
    தோற்றதை நினைத்து
    மனம் உடைந்து விடுவது
    தான் தோல்வி...///

    இது பள்ளிக்கூட குழந்தைகளின் படைப்பு...
    (http://dindiguldhanabalan.blogspot.com/2013/03/Students-Ability-Part-6.html)

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொல்லியுள்ளீர்கள் உண்மைதான்.

      Delete
  3. தன்னம்பிக்கையோடு இருப்பவனுக்கும்
    மீண்டும் விடாது முயற்சிப்பவனுக்கும் தோல்விகள் இல்லை தான்...

    ReplyDelete
    Replies
    1. ஆம்.வெற்றிபெற விழையும் எல்லோருக்குமானது .நன்றி .தொடருங்கள்

      Delete
  4. மீண்டும் மீண்டுமென
    மகிழ்ச்சியாய் துவங்கிடு
    தாண்டுமுயரம்த் தடுத்தாலும்
    தோல்வியில்லைத் தொடர்ந்திடு

    அருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா .எனக்காக அல்லாமல் எல்லோருக்குமாயானப் பதிவு.

      Delete
  5. தன்னம்பிக்கை வரிகள்.. அசத்தல்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கருண்.தொடர்ந்து படிங்க

      Delete
  6. மீண்டும் மீண்டுமென
    மகிழ்ச்சியாய் துவங்கிடு
    தாண்டுமுயரம்த் தடுத்தாலும்
    தோல்வியில்லைத் தொடர்ந்திடு
    முயற்சி செய்யாதவன் தோல்வியை கூட தொட முடியாது தோல்வி தாண்டாமல் வெற்றி ஏது ??
    அருமை..

    ReplyDelete
  7. நீங்க வந்ததுக்கும் நன்றி.கருத்துப் பகிர்ந்தமைக்கும் நன்றி.தொடர்ந்து வாங்க ஊக்கம் தாங்க

    ReplyDelete
  8. நம்பிக்கையூட்டும் நல்ல கவிதை. வாழ்த்துக்கள் சகோதரரே!

    வெற்றி நிச்சயம்! வீழ்வது எதிரி இது நிச்சயம்!!...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சகோ.வெற்றி நமதே .

      Delete
  9. மீண்டும் மீண்டுமென மகிழ்ச்சியாய் துவங்கிடு -
    நம்பிக்கை ஊட்டும் வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. ஆம். நம்மால் முடிந்ததை சொல்வோமே

      Delete
  10. தோல்வி தானே வெற்றியின் படிக்கட்டுகள்.
    தோல்வியின் தோல்வியை பறை சாற்றுகிறது கவிதை.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.நீங்கள் மேலே சொன்னதுபோல் தோல்விதானே வெற்றியின் படிக்கட்டுகள் இறுதியில் தோல்வியே தொல்வியடைப்து வெற்றியால் வெல்கிறது

      Delete
  11. ''..தோற்றதாய் சொன்னாலும்
    துவண்டுவிட முடியாது
    தோல்வியை தொடர்ந்தவன்
    வெற்றிபெற தடையேது..'' nalla vtikal. Eniya vaalththu.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  12. நன்றிங்கம்மா

    ReplyDelete
  13. மீண்டும் மீண்டுமென
    மகிழ்ச்சியாய் துவங்கிடு
    தாண்டுமுயரம்த் தடுத்தாலும்
    தோல்வியில்லைத் தொடர்ந்திடு

    தன்னம்பிக்கை தரும் தாரக வரிகள்..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  14. தோற்பவன் அனுபவசாலி ஆகிறான் .வெற்றி அவனை தானாகவே வந்தடையும் முயற்சித்தால் முடியும்

    ReplyDelete
  15. சொந்த அனுபவம் தந்த கவிதை!

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பொதுவானது தோல்வியும் வெற்றியும்

      Delete
  16. ஒவ்வொரு வரியும் உற்சாக டானிக்! அருமையான தன்னம்பிக்கை வரிகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இன்றைய சமுதாயத்திற்கு தேவையானது டானிக் தானே. வருகைக்கு நன்றி

      Delete
  17. தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். உங்கள் வருகைக்கு நன்றி

      Delete
  18. /மீண்டும் மீண்டுமென
    மகிழ்ச்சியாய் துவங்கிடு
    தாண்டுமுயரம்த் தடுத்தாலும்
    தோல்வியில்லைத் தொடர்ந்திடு//

    தோல்வியை கண்டு துவளாமல் வெற்றி நிச்சயம் என்று முன்னேறவேண்டும் என்று சொல்லும் அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. தோல்விக்குப்பின் வெற்றிதானே அடுத்த வழி.நன்றிங்க தொடர்ந்து வாங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more