கடவுளை நானும் கண்டதுண்டு..
கடவுளை நானும் கண்டதுண்டு கண்டு நன்றி சொன்னதுண்டு கண் கலங்கி பார்த்ததுமே கடவுளே மயங்கி நின்றதுண்டு பழகியே நான் மகிழ்வதுண்டு பாசமோடு அன்பு கொண்டு பார்க்கும் போது பரவசமாய் பக்தியோடு அமைதி கொண்டு மன மொடிந்த நேரத்திலே மகிழ்ச்சி வேண்டி நின்றதுண்டு நாலு வார்த்தை மகிழ்ச்சியாக. நானுயர நன்று கேட்டதுண்டு கள்ளமில்லா நட்பை நானே கடவுளாகப் பார்த்த துண்டு கடைசியிலே சிலர் மறந்து கஷ்டம் தந்து பிரிந்ததுண்டு உடலதிலே உள்கூட்டில் ஒளிந்திருக்கும் தசையதுவே உண்மை அன்பு நேர்மையாக்கும் ஒளி மிகுந்த கடவுளாக்கும் உள்ளபடி சொல்லப் போனால் உருவ முள்ள கடவுளில்லை உள்ளோரின் நல்ல அன்பே உணர்ச்சி யுள்ள கடவுளாகும்