தெய்வங்கள்

தெய்வங்கள்

கடவுளை நானும் கண்டதுண்டு..

கடவுளை நானும் கண்டதுண்டு
கண்டு நன்றி சொன்னதுண்டு
கண் கலங்கி பார்த்ததுமே
கடவுளே மயங்கி நின்றதுண்டு

பழகியே நான் மகிழ்வதுண்டு
பாசமோடு அன்பு கொண்டு
பார்க்கும் போது பரவசமாய்
பக்தியோடு அமைதி கொண்டு

மன மொடிந்த நேரத்திலே
மகிழ்ச்சி வேண்டி நின்றதுண்டு
நாலு வார்த்தை  மகிழ்ச்சியாக.
நானுயர நன்று கேட்டதுண்டு

கள்ளமில்லா  நட்பை நானே
கடவுளாகப் பார்த்த துண்டு
கடைசியிலே சிலர் மறந்து
கஷ்டம் தந்து பிரிந்ததுண்டு

உடலதிலே உள்கூட்டில்
ஒளிந்திருக்கும் தசையதுவே
உண்மை அன்பு நேர்மையாக்கும்
ஒளி மிகுந்த கடவுளாக்கும்

உள்ளபடி சொல்லப் போனால்
உருவ முள்ள கடவுளில்லை
உள்ளோரின் நல்ல அன்பே
உணர்ச்சி யுள்ள கடவுளாகும்




Comments

  1. நட்பின் சிறப்பையும் அருமையாக சொன்னீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    (தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே உங்களைப் போன்ற நண்பர்களையே கடவுளாக மதிக்கிறேன்

      Delete
  2. துண்டு துண்டு என்று நீங்கள் காட்டிய கடவுளை நானும் வணங்குகிறேன் ...இடுப்பில் துண்டு கட்டிக்கிட்டு கடவுளை காட்டுகிறேன் என்பவர்களைத்தான் நம்பமுடியாது !

    ReplyDelete
    Replies
    1. சரியாச்சொன்னீங்க பக்தியாய் இருப்பது வேறு பக்தனாய் நடிப்பவர் நூறு.வந்தமைக்கு நன்றிங்க

      Delete
  3. உள்ளபடி சொல்லப் போனால்
    உருவ முள்ள கடவுளில்லை
    உள்ளோரின் நல்ல அன்பே
    உணர்ச்சி யுள்ள கடவுளாகும்

    கடவுளைக்காட்டும் கவின் மிகு
    கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  4. உள்ளோரின் நல்ல அன்பே
    உணர்ச்சி யுள்ள கடவுளாகும்//

    நச்சின்னு அழகான கவிதை வடித்து சொல்லிவிட்டீர்கள்....அன்புதான் எல்லாவற்றிலும் சிறந்தது இல்லையா...!

    ReplyDelete
    Replies
    1. அன்புடையார் எல்லாம் கடவுள்தான்.அன்பு செலுத்துதல் ஆண்டவனுக்கு செய்யும் புன்னியமாகும்

      Delete
  5. அன்பே சிவமென்றார் அறவோர்
    அன்பே எமக்காகும் அனைத்துமே
    அன்பே வழிநடத்தும் அதைஉணர
    அன்பே அகிலத்தில் தரும்பலமே!..

    சிறந்த கருத்துக்கள்! சிந்திக்கவைக்கும் சிந்தனை!
    அருமை சகோதரரே! அன்போடு வாழ்த்துகிறேன்!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோதரி

      Delete
  6. அன்பே கடவுள் அன்பே சிவம் இதை அழுத்தமாக சொல்லும் அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க

      Delete
  7. //கள்ளமில்லா நட்பை நானே
    கடவுளாகப் பார்த்த துண்டு
    //

    இதுபோல நட்பு கிடைப்பது அரிது

    ReplyDelete
    Replies
    1. அன்பே சிவம் என்று அன்றே சொன்னார்கள் நன்றே.வருகைக்கு நன்றி

      Delete
  8. அன்பே கடவுள்! என்று உணர்ந்து ஒரு கவிதையைத் தந்து இருக்கிறீர்கள்! தங்கள் அன்புள்ளம் வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.அய்யா உங்கள் வாழ்த்துக்கு நன்றி

      Delete
  9. அன்பே கடவுள் என்று அழகாய் உணர்த்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  10. "நல்ல அன்பே
    உணர்ச்சி யுள்ள கடவுளாகும்" . நன்றாக சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.தொடர்ந்து வாங்க

      Delete

  11. உள்ளபடி சொல்லப் போனால்
    உருவ முள்ள கடவுளில்லை
    உள்ளோரின் நல்ல அன்பே
    உணர்ச்சி யுள்ள கடவுளாகும்//

    Azhamaana sindhanai
    arputhamaana varikaL
    vaazhththukkaL

    ReplyDelete
  12. ****உள்ளபடி சொல்லப் போனால்
    உருவ முள்ள கடவுளில்லை
    உள்ளோரின் நல்ல அன்பே
    உணர்ச்சி யுள்ள கடவுளாகும்***

    அருமையான கருத்து!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க வருண்.தொடர்ந்து வாங்க

      Delete
  13. உள்ளபடி சொல்லப் போனால்
    உருவ முள்ள கடவுளில்லை
    உள்ளோரின் நல்ல அன்பே
    உணர்ச்சி யுள்ள கடவுளாகும்

    நன்று சொன்னீர் அய்யா.
    நட்பின் பெருந்தக்க யாவுள

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஜெயகுமார் அய்யா.வருகைக்கு நன்றி

      Delete
  14. நானும்
    கடவுளை உங்களின் கவிதையில் கண்டேன் கவியாழி ஐயா.
    அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க அருணாசெல்வம்

      Delete
  15. உள்ளபடி சொல்லப் போனால்
    உருவ முள்ள கடவுளில்லை
    உள்ளோரின் நல்ல அன்பே
    உணர்ச்சி யுள்ள கடவுளாகு//உண்மை தான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க டினேஷ் .உங்கள் வருகை நல்வரவாகுக

      Delete
  16. அன்பே கடவுள்... சிறப்பாய் சொன்னீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க .தொடர்ந்து வாங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more