ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை
ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை என்னை மிகவும் கவர்ந்த பிடித்த ஆசிரியை. நான் சாதாரண அரசுப் பள்ளியில் படிக்கும்போது எனக்குப் பிடித்த ஆசிரியையை இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. நல்ல சிகப்பாய் மிகவும் அழகாக இருப்பார்கள் .அடிக்கவே மாட்டார்கள்.கன்னத்தை கிள்ளி செல்லமாய் முத்தமிடுவார்கள்.இன்னும் அவரின் முகமும் முத்தமும் அன்பும் நினைவில் இருக்கிறது. அப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் இரண்டாவது படிக்கும்போது . மதிய நேரத்தில் நிறைய மாணவர்கள் தூங்கி வழிவார்கள் நானும் அப்போது அப்படித்தான் தூங்கினேன். இதை மறுக்க யாராலும் முடியாது அப்போதைய வயது அப்படித்தான் இருக்கும்.ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் கதை சொல்ல தொடங்கினால் எல்லோருமே தூங்காமல் இருந்ததுண்டு அப்போதெல்லாம் நல்ல கான்கிரீட் கட்டிடங்கள் இருக்கவில்லை ஓடுபோட்ட கூரைகள்தான் இருந்தது. ஆனால் நல்ல உஷ்ணமான காற்றோட்டமாய் இருக்கும்.அவ்வாறான மதிய வேளையில் சில நேரங்களில் நானும் அசந்து தூங்கி வழிந்திருக்கிறேன்.அப்போதெல்லாம் சிறு குச்சியை வைத்து அடிப்பதுபோல் மிரட்டுவார்கள். இன்னும் சில ஆசிரியர்களோ வீட்டுப்பாடம் எழுதாமல் தல