Showing posts with label கட்டுரை/கணினி/அனுபவம். Show all posts
Showing posts with label கட்டுரை/கணினி/அனுபவம். Show all posts

Thursday, 25 July 2013

தட்டச்சும் கணினி அனுபவமும்

                    எனது மலரும் நினைவுகளை மீண்டும் மீண்டும் வரும் சுவையான தருணங்களை   சொல்ல வேண்டும்  என்று திருமதி.சசிகலா அவர்கள் கேட்டுக் கொண்டதால் அவரின் விருப்பத்தின் பேரிலேயே  மீண்டு வருது.

                      நான் வளர்ந்தது படித்தது  எல்லாமே சேலம்.வசித்தது அழகாபுரம்  ஐந்து ரோடு பகுதியில்.எல்லோரரையும் போல கல்லூரியில் சேர்ந்தவுடன் என்னையும்  தட்டச்சு பயில வேண்டி என்னையும் 1980 ஆகஸ்ட் மாதத்தில்அனுப்பினார்கள்.

                  எல்லோருக்குமே அந்த வயதில் மாணவ மாணவியராய் சேர்ந்து படிக்க அதாங்க தட்டச்சு பயில அருகருகே அமர்ந்து  பேச  மிரட்சியும் விருப்பமும் மனதில் ஒளிந்து கொண்டிருக்கும். நான் மட்டும் விதிவிலக்கா ?.நானும் நாள்தோறும் மாலைநேரம் தவறாமல் வேறு எங்கும் ஊர்சுற்றப் போகமால் செல்லுவேன்.

                    அப்போதுதான் கணினிப் பற்றி எனக்கு அறிந்து கொள்ள முடிந்தது காரணம் நான் வரலாறு படைப்பிரிவை சேலம் அரசு கலைகல்லூரியில் படிப்பதால் எனக்கு தெரிந்திருக்கவில்லை.தட்டச்சு பயில வரும் மாணவ மாணவியர் சேர்ந்து கொண்டு அதைப்பற்றி பெருமையாகப் பேசிக்
கொண்டிருப்பார்கள்  எனக்கு பொறாமையாய் இருக்கும் .

                     தட்டச்சு பரீட்சை நேரத்தில் எங்களது தட்டச்சு ஆசிரியர்  பிரத்யோகமான தனிவகுப்பை சனிக்கிழமைகளில் மட்டும் நடத்துவார்.அதற்காக கொஞ்சதூரம் மூணு கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று பத்து நிமிடம்  முன்னதாக காத்திருக்க வேண்டும்.அங்குதான் அவர் அறையில் கணினியைப் பார்த்தேன் என்பதாய் ஞாபகம்.அதைத் தொட்டுப் பார்க்கும் ஆவல் இருந்தாலும் அதற்க்கான உடுப்பு போட்டு கவனமாய் மூடிவைத்திருந்தார்.

                    நான் கல்லூரியில் தேசிய சமூக சேவை (NSS) யில் சேர்ந்து மாணவர்களுக்கான முகாம் நடக்கும்போது அங்கு எல்லாப் பிரிவு மாணவர்களும் சேர்ந்து தாங்க வேண்டும் அப்போதுதான் முதன்முதலாய் கணினியைக் கண்டேன். நாங்கள் செய்யும் சமூக சேவைகள் அதாவது மரம் நடுதல். பள்ளிக் கூடம் கோவிலுக்கு வெள்ளை வர்ணம் அடித்தல் மாணவர்களுக்கு நல்லொழுக்கம்  சுகாதாரம் பற்றி அறிவுறுத்தல் போன்றவற்றைச் செய்துவிட்டு குழுவாக அமர்ந்து அக்கறையுடன்  அன்றைய நிகழ்வை பேசிக்கொண்டிருக்கும்போது அதைப் படம்பிடித்து உடனே எங்கள் முன்பே கணினியில் உள்ளேற்றி அதைக் காணசெய்வார்கள்.அந்த நிகழ்வின்போதுதான் வீடியோ மூலமாக  கணினி இரண்டிலும் என்னை நானே பார்த்து  மகிழ்ந்தேன்.

                    எனக்கு கணினிக் கற்க விருப்பம் இருந்தாலும் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்தார்கள் காரணம்.நீ வரலாறு படிக்கும் மாணவன் உனக்குப் புரியாது அறிவியல் பாடப் பிரிவை படிப்பவர்கள் மட்டுமே சேரமுடியுமென சொல்லி ஆசையில் தடைவந்தது வருத்தப் பட்டேன்.அவர்களுக்குத் அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை பிற்காலத்தில் நானும் வலையுலகில் வருவேன் எல்லோரின் வாழ்த்தையும் பெறுவேன்  என்று .

                    1989 இல் நான் பணிபுரியும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்
நிறுவனத்தில் அலுவலக உபயோகத்திற்காக  கணினிகள் வந்தது  அதை (DATA ENDRY) என்று தனியாக குளிர்ரூட்டப்பட்ட அறையில் வைத்திருப்பார்கள்.
"உள்ளே அனுமதி இல்லை "என்றும் ."காலணியுடன் உள்ளே வரக்கூடாது"  என்றெல்லாம் கட்டுப்பாடு இருக்கும் .நான் நல்லவனாக சொன்னபடி கேட்டு  சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து  பார்த்துக் கொண்டிருப்பேன்.

               1992 ல் எனக்கு மூன்று நாள் கணினிப் பயிற்சியை கொடுத்தார்கள் அப்போதுதான் எனக்குப் புரிந்தது  கணினியும் அதன் பயன்பாடும் .அதன்பின் நானே என் சொந்த முயற்சியில் வரலாறு படித்த மாணவன் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் வகையில் நாமும் தெரிந்துகொள்ள வேண்டுமென 2005 ல் சொந்தமாக  என் மகளுக்கும் உதவுமென புதிதாக கணினி வாங்கினேன் . எல்லோருபோல சினிமா பார்ப்பது  புகைப்படங்கள் பார்ப்பது என்ற பயன்பாடு மட்டுமே தெரிந்ததால் நானுமே செய்தேன்

                       ஆனால் 20011ல் இருந்து நானும் வலைப்பக்கம் பற்றி தெரிந்து முயற்சித்தேன் எனது நண்பர்களும் பேசினார்களே தவிர யாருமே கணக்கு வைத்திருக்கவில்லை அதனால் என்முயற்சியிலேயே 2012 ஆண்டு 
முகப் புத்தகத்தில் கணக்கைத் தொடங்கினேன் அங்குதான் திருமதி .சசிகலா திருவாளர்.மதுமதி,கணேஷ் போன்றவர்களின் நட்பு கிடைத்தது.   2012ல் நடைபெறும் பதிவர் விழாவுக்கு அழைத்திருந்தார் மறதியால் அந்த பங்குபெறும் வாய்ப்பை இழந்தேன்.அதைப்பற்றி வருத்தம் தெரிவிக்கவே திருமதி.சசிகலாவிடம் சென்றேன் அப்போதுதான் எனக்கு தனிப்பட்ட வலைப்பக்கம் தொடங்கித் தந்தார் புலவரைய்யாவின் கைபேசி எண்ணைக் கொடுத்து அவரிடம் அறிமுகம் செய்து இன்று வலையுலகில் என்னை பிரபலப் படுத்தியதால்தான் இன்றுவரை எழுதுகிறேன்.

                       இப்போது நான் எழுதும் படைப்புகளுக்கு எனக்கு கணக்கு தொடங்கி  ஊக்கப்படுத்தியமைக்கு திருமதி.சசிகலா (வீசும் தென்றல் ) அவர்களுக்கும். சரியாக முறைப்படுத்தி தனிப் பக்கமாக  எழில் சேர்த்த திருவாளர்.மதுமதி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

          திட்டுவதானாலும் பாராட்டுவதானாலும் நீங்கள் திருமதி .சசிகலாவிடமே சொல்லலாம் .இந்த கட்டுரையை எழுத கோத்துவிட்டதும் அவங்கதான் .

           நான் திருவாளர்.புலவர்.ராமநுசம்  அய்யா அவர்களின் கணினி அனுபவம் பற்றியே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .அதையும் அவரும் விரும்புவார் என்றே நினைக்கிறேன்