தட்டச்சும் கணினி அனுபவமும்
எனது மலரும் நினைவுகளை மீண்டும் மீண்டும் வரும் சுவையான தருணங்களை சொல்ல வேண்டும் என்று திருமதி.சசிகலா அவர்கள் கேட்டுக் கொண்டதால் அவரின் விருப்பத்தின் பேரிலேயே மீண்டு வருது.
நான் வளர்ந்தது படித்தது எல்லாமே சேலம்.வசித்தது அழகாபுரம் ஐந்து ரோடு பகுதியில்.எல்லோரரையும் போல கல்லூரியில் சேர்ந்தவுடன் என்னையும் தட்டச்சு பயில வேண்டி என்னையும் 1980 ஆகஸ்ட் மாதத்தில்அனுப்பினார்கள்.
எல்லோருக்குமே அந்த வயதில் மாணவ மாணவியராய் சேர்ந்து படிக்க அதாங்க தட்டச்சு பயில அருகருகே அமர்ந்து பேச மிரட்சியும் விருப்பமும் மனதில் ஒளிந்து கொண்டிருக்கும். நான் மட்டும் விதிவிலக்கா ?.நானும் நாள்தோறும் மாலைநேரம் தவறாமல் வேறு எங்கும் ஊர்சுற்றப் போகமால் செல்லுவேன்.
அப்போதுதான் கணினிப் பற்றி எனக்கு அறிந்து கொள்ள முடிந்தது காரணம் நான் வரலாறு படைப்பிரிவை சேலம் அரசு கலைகல்லூரியில் படிப்பதால் எனக்கு தெரிந்திருக்கவில்லை.தட்டச்சு பயில வரும் மாணவ மாணவியர் சேர்ந்து கொண்டு அதைப்பற்றி பெருமையாகப் பேசிக்
கொண்டிருப்பார்கள் எனக்கு பொறாமையாய் இருக்கும் .
தட்டச்சு பரீட்சை நேரத்தில் எங்களது தட்டச்சு ஆசிரியர் பிரத்யோகமான தனிவகுப்பை சனிக்கிழமைகளில் மட்டும் நடத்துவார்.அதற்காக கொஞ்சதூரம் மூணு கிலோ மீட்டர் சைக்கிளில் சென்று பத்து நிமிடம் முன்னதாக காத்திருக்க வேண்டும்.அங்குதான் அவர் அறையில் கணினியைப் பார்த்தேன் என்பதாய் ஞாபகம்.அதைத் தொட்டுப் பார்க்கும் ஆவல் இருந்தாலும் அதற்க்கான உடுப்பு போட்டு கவனமாய் மூடிவைத்திருந்தார்.
நான் கல்லூரியில் தேசிய சமூக சேவை (NSS) யில் சேர்ந்து மாணவர்களுக்கான முகாம் நடக்கும்போது அங்கு எல்லாப் பிரிவு மாணவர்களும் சேர்ந்து தாங்க வேண்டும் அப்போதுதான் முதன்முதலாய் கணினியைக் கண்டேன். நாங்கள் செய்யும் சமூக சேவைகள் அதாவது மரம் நடுதல். பள்ளிக் கூடம் கோவிலுக்கு வெள்ளை வர்ணம் அடித்தல் மாணவர்களுக்கு நல்லொழுக்கம் சுகாதாரம் பற்றி அறிவுறுத்தல் போன்றவற்றைச் செய்துவிட்டு குழுவாக அமர்ந்து அக்கறையுடன் அன்றைய நிகழ்வை பேசிக்கொண்டிருக்கும்போது அதைப் படம்பிடித்து உடனே எங்கள் முன்பே கணினியில் உள்ளேற்றி அதைக் காணசெய்வார்கள்.அந்த நிகழ்வின்போதுதான் வீடியோ மூலமாக கணினி இரண்டிலும் என்னை நானே பார்த்து மகிழ்ந்தேன்.
எனக்கு கணினிக் கற்க விருப்பம் இருந்தாலும் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்தார்கள் காரணம்.நீ வரலாறு படிக்கும் மாணவன் உனக்குப் புரியாது அறிவியல் பாடப் பிரிவை படிப்பவர்கள் மட்டுமே சேரமுடியுமென சொல்லி ஆசையில் தடைவந்தது வருத்தப் பட்டேன்.அவர்களுக்குத் அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை பிற்காலத்தில் நானும் வலையுலகில் வருவேன் எல்லோரின் வாழ்த்தையும் பெறுவேன் என்று .
1989 இல் நான் பணிபுரியும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்
நிறுவனத்தில் அலுவலக உபயோகத்திற்காக கணினிகள் வந்தது அதை (DATA ENDRY) என்று தனியாக குளிர்ரூட்டப்பட்ட அறையில் வைத்திருப்பார்கள்.
நிறுவனத்தில் அலுவலக உபயோகத்திற்காக கணினிகள் வந்தது அதை (DATA ENDRY) என்று தனியாக குளிர்ரூட்டப்பட்ட அறையில் வைத்திருப்பார்கள்.
"உள்ளே அனுமதி இல்லை "என்றும் ."காலணியுடன் உள்ளே வரக்கூடாது" என்றெல்லாம் கட்டுப்பாடு இருக்கும் .நான் நல்லவனாக சொன்னபடி கேட்டு சில சந்தேகங்களை நிவர்த்தி செய்து பார்த்துக் கொண்டிருப்பேன்.
1992 ல் எனக்கு மூன்று நாள் கணினிப் பயிற்சியை கொடுத்தார்கள் அப்போதுதான் எனக்குப் புரிந்தது கணினியும் அதன் பயன்பாடும் .அதன்பின் நானே என் சொந்த முயற்சியில் வரலாறு படித்த மாணவன் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் வகையில் நாமும் தெரிந்துகொள்ள வேண்டுமென 2005 ல் சொந்தமாக என் மகளுக்கும் உதவுமென புதிதாக கணினி வாங்கினேன் . எல்லோருபோல சினிமா பார்ப்பது புகைப்படங்கள் பார்ப்பது என்ற பயன்பாடு மட்டுமே தெரிந்ததால் நானுமே செய்தேன்
ஆனால் 20011ல் இருந்து நானும் வலைப்பக்கம் பற்றி தெரிந்து முயற்சித்தேன் எனது நண்பர்களும் பேசினார்களே தவிர யாருமே கணக்கு வைத்திருக்கவில்லை அதனால் என்முயற்சியிலேயே 2012 ஆண்டு
முகப் புத்தகத்தில் கணக்கைத் தொடங்கினேன் அங்குதான் திருமதி .சசிகலா திருவாளர்.மதுமதி,கணேஷ் போன்றவர்களின் நட்பு கிடைத்தது. 2012ல் நடைபெறும் பதிவர் விழாவுக்கு அழைத்திருந்தார் மறதியால் அந்த பங்குபெறும் வாய்ப்பை இழந்தேன்.அதைப்பற்றி வருத்தம் தெரிவிக்கவே திருமதி.சசிகலாவிடம் சென்றேன் அப்போதுதான் எனக்கு தனிப்பட்ட வலைப்பக்கம் தொடங்கித் தந்தார் புலவரைய்யாவின் கைபேசி எண்ணைக் கொடுத்து அவரிடம் அறிமுகம் செய்து இன்று வலையுலகில் என்னை பிரபலப் படுத்தியதால்தான் இன்றுவரை எழுதுகிறேன்.
இப்போது நான் எழுதும் படைப்புகளுக்கு எனக்கு கணக்கு தொடங்கி ஊக்கப்படுத்தியமைக்கு திருமதி.சசிகலா (வீசும் தென்றல் ) அவர்களுக்கும். சரியாக முறைப்படுத்தி தனிப் பக்கமாக எழில் சேர்த்த திருவாளர்.மதுமதி அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திட்டுவதானாலும் பாராட்டுவதானாலும் நீங்கள் திருமதி .சசிகலாவிடமே சொல்லலாம் .இந்த கட்டுரையை எழுத கோத்துவிட்டதும் அவங்கதான் .
நான் திருவாளர்.புலவர்.ராமநுசம் அய்யா அவர்களின் கணினி அனுபவம் பற்றியே தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் .அதையும் அவரும் விரும்புவார் என்றே நினைக்கிறேன்
முதல் கணினி அனுபவம் எல்லாருக்கும் சுவாரஸ்யமாதான் இருக்கு ரசித்தேன்...!
ReplyDeleteமத்ததையும் இப்போ நம்மாலே நினைச்சுப் பார்க்க முடியுதே
Deleteசுருக்கமான அனுபவத்துடன் வலைப்பக்கம் தொடங்கியது வரை சொன்னது மட்டுமல்லால், உதவியவர்களை நன்றியுடன் குறிப்பிட்டது அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
ஆரோக்கியமான விஷயம்தானே .உங்களைப் பற்றி தனிப்பதிவே எழுத இருக்கிறேன்
Deleteகணினி அனுபவம் அருமை.... சகோ சசிகலா அவர்களையும் குறிப்பிட்டது பெருமை..
ReplyDeleteநன்றிக்குரியவர்களை மறக்கக்கூடாது
Deleteமலரும் நினைவுகளை மீண்டும் வரும் சுவையான தருணங்களை
ReplyDeleteஅருமையாகப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!
எல்லோருக்குமே அந்த நாட்களை நினைக்கும் வண்ணம் யோசனை செய்த ராஜி.அவர்களுக்கும் நன்றி சொல்லணும்
Deleteகணினி அனுபவம் மட்டும் போல் தெரியவில்லை ...'கன்னி 'அனுபவமும்தான் இல்லையா ?
ReplyDeleteஉண்மைதான் காதல் அனுபவமும் அப்போதுதான் நிகழ்ந்தேறியது
Deleteஇயல்பான நடையில் தங்கள்
ReplyDeleteகணினி அனுபவத்தைப் பகிர்ந்தவிதம்
மனம் கவர்ந்தது
பதிவுலகிற்குஒரு நல்ல பதிவரை
அறிமுகம் செய்தமைக்காக
சசிகலா அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்
உண்மையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சொல்லிதந்தவருக்கு நன்றி சொல்லும் தருனமாய் எண்ணுகிறேன்
Deletetha.ma 2
ReplyDeleteஎண்பதுகளில் வாழ்ந்தோரின் கணனி அனுபவங்கள் இன்னும் சுவையாகத் தான் உள்ளது. எத்தனை ஆண்டுகள் கழித்து கணனியை முழுமையாக பயன்படத் தொடங்கியுள்ளீர்கள். மிக அருமை.
ReplyDelete// "உள்ளே அனுமதி இல்லை "என்றும் ."காலணியுடன் உள்ளே வரக்கூடாது" என்றெல்லாம் கட்டுப்பாடு இருக்கும் //
ReplyDeleteஅப்போதெல்லாம் கம்ப்யூட்டர் படித்தவர்கள் விடும் பந்தா இருக்கே... அச்சச்சோ ரொம்ப ஓவருங்க...
தெரியாமல் கணினியின் திரையை தொட்டுவிட்டால் விரல் ரேகைப் படிந்தால் எல்லாமே அழிந்துவிடும் என்றும் எவ்வளவு அவமானப் படுத்தினார்கள் .இன்று எனது கணினி எனக்கே.எவ்வளவு மகிழ்ச்சி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபடித்துவிட்டேன் நன்றி
Deleteதங்கள் அனுபவம் ரசித்தேன்
ReplyDeleteமீண்டும் மீண்டும் வாங்க .விரும்பியதை ரசிங்க
Deleteஉங்கள் கணனி முதல் அனுபவம் மிகவும் அருமை!
ReplyDeleteஅத்தனை இயல்பாக இனிமையாக எழுதியுள்ளீர்கள் சகோ!
உங்களை ஊக்கப்படுத்தியவர்களை மிக அழகாக நினைவுகூர்ந்து நன்றிதெரிவித்த விதம் மிகமிகச் சிறப்பு!
நல்ல பதிவும் பகிர்வும்!!
வாழ்த்துக்கள் சகோ!
உங்களைப்போலவே ரமணி அய்யாவும் சிறப்பாக உள்ளதாக எனக்கு கைபேசியில் சொன்னார்கள்.நிறைவாய் இயல்பாய் இருப்பதாக சொன்னார்கள்.எனக்குப் பிடித்த இருவர் சொன்னது எனக்கு ஊக்கமளிப்பதாய் உள்ளது,நன்றிங்க சகோ
Deleteமலரும் நினைவுகளை அழகாக தொகுத்து தந்தமைக்கு நன்றிங்க. அழைப்பை ஏற்று அழகான பதிவோடு நன்றியையும் நல்கிய விதம் சிறப்பு.
ReplyDeleteஎல்லோரையும்போல என்னையும் அழைத்தீர்கள் நான் உண்மையை சொல்லி மகிழ்ந்தேன் எல்லோரும் என்னைப் பாராட்டுகிறார்கள் .
Deleteவாய்ப்பு கிடைத்தால் தான் தளம் அமைக்க முடியும் அவ்வாறு எனக்கும் வாய்ப்பு வழங்கி தளம் அமைத்தமைக்கு நன்றி சொல்லாமல் இருப்பது முறையல்ல அதனால் நன்றி சொன்னேன் சகோ.
ரசித்தேன்.,...
ReplyDeleteமகிழ்ந்தேன்
Deleteகணினி அனுபவத்தை அழகாய் சொல்லியமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைத்தளம் அமைக்க உதவியவர்களை மறக்காமல் நன்றி சொன்னது மகிழ்ச்சி.
நன்றி மறவாமல் இருப்பதுதான் நல்லது.ஏன் உங்களையும் சேர்த்தே நன்றி சொல்லவேண்டும் .எனக்கு நாளும் வந்து நல்லுரைகைப் போதிக்கும் உங்களையும் மறவேன்
Deleteகணிணி அனுபவததை சுவையாக பகிர்ந்தமைக்கு நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதொடர்ந்து ஆதரவு தரும் உங்களுக்கும் நன்றீங்க சுரேஷ்
Deleteஅன்பு நண்பரே! தாங்களும் அன்பு மகள் அருணா செல்வியும் எனக்கு இட்ட பணியை, உடன் செய்யும் சூழ்நிலை தற்போது இல்லை! ஆனால் எப்படியும் செய்வேன் என்தை தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி!
ReplyDeleteஅய்யா உங்களுக்கு உள்ள அவசரம் பற்றி அறிவேன்.நீங்கள் முடிந்தால் பொறுமையாக எழுதவும்.உங்கள் அனுபவம் பற்றி எனக்கு சொல்லிருக்கிறீர்கள்.அதை மற்றவருக்கும் தெரிவித்தால் நன்றாய் இருக்குமென்பதாலேயே உங்களையும் அழைத்தேன்
Deleteகணனி அனுபவம் அழகாகத் தந்துள்ளீர்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து வாங்க
Delete// எனக்கு கணினிக் கற்க விருப்பம் இருந்தாலும் என்னை சேர்த்துக் கொள்ள மறுத்தார்கள் காரணம்.நீ வரலாறு படிக்கும் மாணவன் உனக்குப் புரியாது அறிவியல் பாடப் பிரிவை படிப்பவர்கள் மட்டுமே சேரமுடியுமென சொல்லி ஆசையில் தடைவந்தது வருத்தப் பட்டேன்.//
ReplyDeleteஇப்படி தடை போட்டே நிறையபேரை படிக்க விடாமல் செய்து விட்டார்கள்.
// அவர்களுக்குத் அப்போது தெரிந்திருக்க வாய்ப்பில்லை பிற்காலத்தில் நானும் வலையுலகில் வருவேன் எல்லோரின் வாழ்த்தையும் பெறுவேன் என்று //.
இன்றைய வலையுலகில் “ கவியாழி கண்ணதாசன் “ பெயரே இல்லாத நாளில்லை என்ற அளவுக்கு உயர்ந்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க .தொடர்ந்து வாங்க
Deleteபடித்தேன், ரசித்தேன்!
ReplyDeleteமகிழ்ந்தேன்.
Deleteஒவ்வொருவருக்கும் ஒரு வித்தியாசமான அனுபவங்கள்...நான் உயர் பள்ளிக் கல்வியை சேலத்தில் தான் பயின்றேன்... நீங்கள் கூறும் ஐந்து ரோடு சினிமா தியேட்டர்களுக்காக நான் வரும் பகுதி ...நினைவிற்கு வந்தது அப்போது பார்த்த சில படங்களும் , அனுபவங்களும்...
ReplyDeleteஅப்படிங்களா?மிக்க மகிழ்ச்சி.நீங்களும் பதிவர் விழாவுக்கு வாங்க
Deleteதடைகளை மீறி கணணி கற்றுக் கொண்டு இன்று வலைபதிவாளராகவும் புகழ் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteதாமதமாக வந்தாலும் தரமான வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு நன்றி
Delete