ஏற்காட்டில் செய்த சமூக நலப்பணிகள்
1980 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தபோது NCC,NSS போன்ற சமூகப்பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கும்போதே வாய்ப்புக் கிடைத்ததால் நான் பல முகாம்களில் பங்குகொண்டு கிராமங்களுக்குச் சென்று சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ,மாணவர்களுக்கு கல்விப் பற்றிய அறிவுரைகள் கோவில்களுக்கு வெள்ளையடித்தல் சாலை வசதி மேம்பாடு போன்ற சமூக அக்கறை கொண்ட பணிகளில் நாட்டம் ஏற்பட்டது, எனக்கு ஏற்பட்ட சமூக சேவை ஈடுபாடு காரணமாக சேலத்தில் இயங்கி வந்த சேலம் மிட்டவுன் ஜேசிஸ் சங்கத்தில் உறுப்பினரானேன் .அங்கு பல சமூக சேவைகள் செய்யும் நிகழ்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது இதன் காரணமாக இதையே நாம் தொடர்ந்தால் என்ன என்ற எனக்குள் மனதில் ஏற்பட்ட கேள்வியின் காரணமாகவே பின்னாளில் ஏற்காட்டில் எனக்கு சமூக சேவை செய்யும் எண்ணத்திற்கு தூண்டுகோலாய் இருந்தது. 1986 ம் ஆண்டு நிரந்தர அரசாங்க பதவி நான் விரும்பிய எற்காட்டிலேயே காப்பீட்டுத்துறை வளர்ச்சி அதிகாரியாக நிரந்தர வேலையில் பணி நியமனம் செய்யப்பட்டேன்.பணி நிமித்தமாக நான் எல்லா வங்கிகளுக்கும் சென்று வந்ததால் என்னைப் போன்ற இளையோர்களுடன்சேர்ந்து பழகும் வாய்ப்