ஏற்காட்டில் செய்த சமூக நலப்பணிகள்
1980 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தபோது NCC,NSS போன்ற சமூகப்பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கும்போதே வாய்ப்புக் கிடைத்ததால் நான் பல முகாம்களில் பங்குகொண்டு கிராமங்களுக்குச் சென்று சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ,மாணவர்களுக்கு கல்விப் பற்றிய அறிவுரைகள் கோவில்களுக்கு வெள்ளையடித்தல் சாலை வசதி மேம்பாடு போன்ற சமூக அக்கறை கொண்ட பணிகளில் நாட்டம் ஏற்பட்டது,
எனக்கு ஏற்பட்ட சமூக சேவை ஈடுபாடு காரணமாக சேலத்தில் இயங்கி வந்த சேலம் மிட்டவுன் ஜேசிஸ் சங்கத்தில் உறுப்பினரானேன் .அங்கு பல சமூக சேவைகள் செய்யும் நிகழ்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது இதன் காரணமாக இதையே நாம் தொடர்ந்தால் என்ன என்ற எனக்குள் மனதில் ஏற்பட்ட கேள்வியின் காரணமாகவே பின்னாளில் ஏற்காட்டில் எனக்கு சமூக சேவை செய்யும் எண்ணத்திற்கு தூண்டுகோலாய் இருந்தது.
1986 ம் ஆண்டு நிரந்தர அரசாங்க பதவி நான் விரும்பிய எற்காட்டிலேயே காப்பீட்டுத்துறை வளர்ச்சி அதிகாரியாக நிரந்தர வேலையில் பணி நியமனம் செய்யப்பட்டேன்.பணி நிமித்தமாக நான் எல்லா வங்கிகளுக்கும் சென்று வந்ததால் என்னைப் போன்ற இளையோர்களுடன்சேர்ந்து பழகும் வாய்ப்புக் கிடைத்தது . நான் பணிபுரியும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் கிராம மேம்பாட்டு விழாக்களை அங்குள்ள வங்கிகள் மற்றும் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிறுவனகளுடன் சேர்ந்து கால்நடை மருத்துவ முகாம் ,சமூக நல மேம்பாடு கூட்டங்கள் ஏற்பாடு செய்யும் வாய்ப்பு கிட்டியது.

ஏற்காடு ஜேசிஸ் என்னும் சர்வதேச சமூகப்பணியில் தலைவராக பொறுப்பேற்றபோது எடுத்தப்படம்
திரு..பீ.ஜீ. ராஜன் மாநிலத் தலைவர்,நான் நிறுவனத் தலைவர். ஏற்காடு ஜேசிஸ் சங்கம்,திரு.ராஜி. தலைவர்.சேலம் மிட் டவுன் ஜேசிஸ் சங்கம் ,சேலம்,திரு.ராஜாகோவிந்தசாமி மாநிலச் செயலாளர்,திரு.சேரலாதன் ,செயலர்.சேலம் மிட்டவுன் ஜேசிஸ் சங்கம்
ஏற்காட்டில்1989 ம் ஆண்டு நடைபெற்ற கோடை விழாவின் போது ஜேசிஸ் சங்கம் சார்பாக பரிசளிப்பு விழா நடத்தியபோது அப்போதைய சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.காசிவிஸ்வநாதன் அவர்களுடன் நான்
கைப்பந்து,கேரம் .வளைபந்து போன்ற விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் இருந்ததால் 1990 ம் ஆண்டு சேலம் மாவட்ட கேரம் கழகம் செயலாளராய் என்னை நியமனம் செய்தபோது எடுத்தப்படம்
ஏற்காட்டில் பட்டிப்பாடி வேலூர் என்னும் கிராமத்திலுள்ள பள்ளியைத் தத்தெடுத்து அங்கு படிக்கும் மாணவர்களுக்கு சமூக மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு,விளையாட்டு மற்றும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் மற்றும் பள்ளிக்கு கடிகாரம் போன்றவை வழங்கியபோது எடுத்தப்படம்
சேலம் மாவட்ட கலெக்டர் ஆக பணிபுரிந்த திரு.பாருக்கி I.A.S அவர்கள் சேலத்திலிருந்து ஏற்காடு மலைப்பாதையில் நடந்து வந்து இயற்கை காடுகளை காப்பது பற்றிய விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டதை பாராட்டி கோடைவிழாவில் வாழ்த்தியபோது எடுத்தப்படம்.
இதுபோன்ற சமூக அக்கறையுள்ள பல நிகழ்வுகளில் என்னை ஈடுபடுத்தி என்னால் முடிந்த உதவிகளை எனது நண்பர்கள் மூலமாகவும் ஏற்காடு ஜேசிஸ் சங்க தலைவர் என்ற முறையிலும் நான் பணிபுரியும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் சார்பாகவும் இவ்வாறான சமூகப் பணிகளில் என்னை ஈடுபட எனது பெற்றோரும் என்னை ஊக்கப் படுத்தியதை எண்ணியும் அன்று நான் செய்த பணிகளைநினைத்துப் பெருமையாக அன்றிரவு மகிழ்ச்சியாய் ஏற்காட்டில் தூங்க முடிந்தது.
(கவியாழி)
சமூகப்பணிகளுக்கூ வாழ்த்துகள்.பாராட்டுக்கள்..!
ReplyDeleteபோற்றத் தகுந்த சமூகப் பணிகளைப் பாராட்டிய தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பணி.
ReplyDelete
ReplyDeleteசமூக நலத்தொண்டர் கவியாழி வாழ்க!
தங்களின் சமூக நலத் தொண்டு மென்மேலும் சிறந்து விளங்கிட வாழ்த்துக்கள் சகோதரா .
ReplyDeleteபிரமிக்க வைக்கிறது
ReplyDeleteநீரில் மிதக்கிற ஐஸ் கட்டியின் மேல் பகுதியைப் பார்த்தே
இத்தனை நாள் நாங்கள் தங்கள் மீது மிக்க
பெருமை கொண்டிருந்தோம்
தொடர்ந்து இதுபோல் அறிய
மிக்க மகிழ்வாய் இருக்கிறது
படங்களுடன் பகிர்வு மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 4
ReplyDeleteஇளவயது முதலே சமூக அக்கறையுடன் பல்வேறு சமுக பணிகளில் கலந்து கொண்ட உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சார்...
ReplyDeleteசமூகப் பணிக்கு வாழ்த்துக்கள். தொடரவும்..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteதங்களின் சீரிய பணி தொடரட்டும்
tha.ma.6
ReplyDeleteபழைய சாதனைகளின் அஸ்திவாரத்தின் மீது இன்று புதிதாகச் சாதிக்க எமது வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழ்த்துகள்.....
ReplyDeleteநானும் நெய்வேலியில் கல்லூரி காலத்தில் Junior Jaycees Chairman ஆக இருந்தேன். இரண்டு வருடங்கள்.... பல வித அனுபவங்கள்.