சென்னையிலிருந்து ரெய்ச்சூர் வரை ...
05.01.2015 அன்று சென்னையிலிருந்து மும்பை மெயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதியுடைய தொடர்வண்டியில் இரவு 10.50 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் காலை 12.00க்கு ரெய்ச்சூர் சேர்ந்தேன் அதிக வெய்யிலோ குளிரோ இல்லாமல் மிதமான சூழல் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.அதிக கூட்டமோ நெரிச்சலோ இல்லாமல் அமைதியான சூழலில் இருந்தது மிகவும் பிடித்திருந்தது இங்குள்ள எல்லா உணவகங்களிலும்இதுபோன்ற பெரிய அளவிலான இட்லி கிடைத்தது.இரண்டு இட்லியே காலை,இரவு உணவுக்கும் போதுமானதாக இருந்தது.சாம்பார் கொடுக்காமல் துவையலுடன் ஊறுகாய் போல மிளகாய் கரைசல் மட்டுமே தந்தார்கள் அருகில் ராகவேந்திரர் நிர்மானித்த மந்த்ராலயம் இருக்கிறதாகவும் அங்கு சென்றுவிட்டு பஞ்சமுகி ஆஞ்சிநேயரை தரிசனம் செய்யலாம் என என்னுடன் பயணித்த நண்பர் சொன்னதால் அங்கு சென்று ராகவேந்திர சாமிதரிசனம் செய்தப்பின் அங்கு அனைவருக்குமான இலவச மதிய உணவும் சாப்பிட்டோம்.அங்கு அனைவரோடும்மிக சுகாதாரமான தரையில் உட்கார்ந்து உணவருந்தியது மனதுக்கு இதமாகவே இருந்தது. திங்கள் காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு மும்பை தாதர் விர