சாலை விதியை மதிப்பீரே
நவநாகரீக மாற்றத்தில் மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை வசதி , கல்வி,சுகாதாரம், வேலைவாய்ப்புகள் மற்றும் வாகனத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாமல் அனைவருக்கும் வாகனம் அவசியம் என்ற நிலையாகிறது.நமது நெடுஞ்சாலைகளும் நல்ல தரத்துடன் மாறி நல்லதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் கெடுதல்களையும் நாம் அனைவரும் உணரவேண்டும் இன்று எல்லோருமே பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்கிறோம் ஆனாலும் சில நேரங்களில் விபத்து நடப்பதை தவிர்க்க இயலாமல் போகிறது.இங்கு குற்றம் குறைகளை தவிர்க்க ஒவ்வொரு தனி மனிதருக்கும் சாலையின் பயன்பாடு அவசியம் பற்றித் தெரிந்திருந்தாலும் அவசரம் என்ற அலட்சியத்தால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முன்வரவேண்டும். சாலைவிதிகளை அறிந்தும் தவறிழைத்தல் என்ற காரணமே விபத்துக்கு முக்கிய காரணமாய் இருக்கிறது.முந்திசெல்லுதல் ,தவறான இடத்தில் வண்டிகளை நிறுத்தி வைத்தல் ,மாற்றுவழியில் அவசியமற்ற வேகம், பாதசாரிகளின் ஒழுங்கற்ற சாலையைக் கடக்கும் முயற்சி, விலங்குகளை சாலையில் திரிய விடுதல் போன்றவையே முக்கிய காரணிகளாய் இருக்கிறது தனி மனித ஒழுக்கமே சாலையில் விபத்துக்கள்