தெய்வங்கள்

தெய்வங்கள்

சாலை விதியை மதிப்பீரே

       நவநாகரீக மாற்றத்தில் மக்களின் பொருளாதாரம், வாழ்க்கை வசதி ,
கல்வி,சுகாதாரம், வேலைவாய்ப்புகள் மற்றும் வாகனத்தின் பயன்பாடு தவிர்க்க முடியாமல் அனைவருக்கும் வாகனம் அவசியம்  என்ற நிலையாகிறது.நமது நெடுஞ்சாலைகளும்  நல்ல தரத்துடன் மாறி நல்லதாக இருந்தாலும் அதனால் ஏற்படும் கெடுதல்களையும் நாம் அனைவரும் உணரவேண்டும்


 இன்று எல்லோருமே பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்கிறோம் ஆனாலும் சில நேரங்களில் விபத்து நடப்பதை தவிர்க்க இயலாமல் போகிறது.இங்கு  குற்றம் குறைகளை தவிர்க்க ஒவ்வொரு தனி மனிதருக்கும் சாலையின் பயன்பாடு அவசியம் பற்றித் தெரிந்திருந்தாலும் அவசரம் என்ற அலட்சியத்தால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முன்வரவேண்டும்.



சாலைவிதிகளை அறிந்தும் தவறிழைத்தல் என்ற காரணமே விபத்துக்கு முக்கிய காரணமாய் இருக்கிறது.முந்திசெல்லுதல் ,தவறான இடத்தில் வண்டிகளை நிறுத்தி வைத்தல் ,மாற்றுவழியில் அவசியமற்ற வேகம்,
பாதசாரிகளின் ஒழுங்கற்ற சாலையைக் கடக்கும் முயற்சி, விலங்குகளை  சாலையில் திரிய விடுதல்  போன்றவையே முக்கிய காரணிகளாய் இருக்கிறது




தனி மனித ஒழுக்கமே சாலையில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முடியும் .முறையான பயன்பாடு ,சாலை விதிகளைப் பற்றி அனைவரும் அறிய வைத்தல் அவசியமில்லாத  வேகம் ,சரியான இடத்தில் சாலைகளை கடப்பது ,போக்குவரத்து விளக்குகளை கவனித்து செல்லுதல் .முறையான அளவான வேகம் போன்ற முக்கிய காரணிகளே பெரும்பாலான சாலை விபத்துக்களைத் தவிர்க்க முடியும.


சாலை விதிகளை மதிப்பீர் நாளையும் எழுந்து நடப்பீர்.


(படங்களுக்கு நன்றி கூகிள்)

(கவியாழி)

Comments

  1. சரியாகச் சொன்னீர்கள் ஐயா... அதிக வேகம் என்றும் ஆபத்து தான்...

    ReplyDelete
  2. தனி மனித ஒழுக்கமே சாலையில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முடியும் //

    சாலை விதிகளை மதிக்காமல், மதிக்கும் நம்மீதே பின்புறமாக வண்டியை ஏத்துறானுக....

    ReplyDelete
  3. சாலை விதிகள் நம் பாதுகாப்புக்கானவை
    என்கிற எண்ணம் அனைவருக்கும் தோன்றவேண்டும்
    பயனுள்ள அருமையான பகிர்வு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சாலை விதிகளை மதிப்பீர் நாளையும் எழுந்து நடப்பீர்//சிலவேளைகளில் மதிப்பவன் ஆபத்தில் சிக்க விதிகளை மீறுகின்றவன் தப்பி விடுகின்றானே

    ReplyDelete
  5. சரியாகச் சொன்னீர்கள்.
    சில சமயங்களில் ரோடு கிராஸ் பண்ணிவிட்டால் பி.டி.உஷா மாதிரி பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. வண்டி ஓட்டும்போது, சலையில் நடக்கும்போதும் ஓரளவுக்கு நான் சாலை விதிகளை கடைப்பிடிச்சுக்கிட்டுதான் இருக்கேன். பசங்களுக்கும் சொல்லிக் கொடுத்திருக்கேன். நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. சாலை விதிகளை மதிப்போம்!

    ReplyDelete
  8. அருமையான பதிவு.
    சாலை விதிகளை மதிப்போம்.

    ReplyDelete
  9. கவிஞரே! நன்றாகவே சொன்னீர்கள்! சாலை விதிகளை மறந்ததால்தான் இவ்வளவு விபத்துக்கள். யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  10. சாலை விதிகளின் முக்கியத்துவம் படிக்க மட்டும் அல்ல. கடைபிடிக்கவும்கூட.

    ReplyDelete
  11. விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் அதனால் இழப்பு நமக்கு மட்டுமல்ல பிறருக்கும் என்பதை உணர வேண்டும்

    ReplyDelete
  12. "சாலை விதிகளைப் பற்றி அனைவரும் அறிய வைத்தல் அவசியமில்லாத வேகம், சரியான இடத்தில் சாலைகளை கடப்பது, போக்குவரத்து விளக்குகளை கவனித்து செல்லுதல். முறையான அளவான வேகம் போன்ற முக்கிய காரணிகளே பெரும்பாலான சாலை விபத்துக்களைத் தவிர்க்க முடியும." என்ற வழிகாட்டலை வரவேற்கிறேன்.

    பலருக்கு நன்மை தரும் பதிவு இதுவாகும் என்பதை விட பலரும் பின்பற்ற வேண்டிய தகவலை உள்ளடக்கிய பதிவு இதுவாகும்.

    ReplyDelete
  13. நிச்சயம் பின்பட்ற வேண்டிய விதிகள்...
    நன்றி..

    ReplyDelete
  14. விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்
    நன்றி ஐயா

    ReplyDelete
  15. நல்ல பகிர்வு... பாராட்டுகள்.

    சாலை விதிகளை மதித்தால் பல விபத்துகளை தவிர்க்கலாம்...

    ReplyDelete
  16. சாலை விதிகள் உயிர் காக்கும் வழிகள்..அனைவரும் பின்பற்ற வேண்டும்...பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  17. மிகவும் அருமையான ஒரு பதிவு! தமிழகம்தன் இன்று இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் முதலிடம் வகிக்கின்றது!

    விழிப்புணர்வு பதிவு!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more