பிடிவாதம் மனநோயா? ஊனமா?
பிடிவாதம் என்பது தவறோ சரியோ ஆனால் இது எல்லா வயதினரையும் விட்டு வைப்பதில்லை. எப்போதாவது அல்லது எப்பவுமே பிடிவாதத்தையே இயல்பாக கொண்டவர்கள் நிறையப்பேர் உள்ளனர். தான் சொல்வதுதான் சரி என்று வாதிட்டு அவர்களே தம்மைத்தாமே சரி என்று சுயநிர்ணயம் செய்து பிடிதளராமல் தான் நினைத்ததையே செய்வார்கள். குழந்தைப்பருவத்தில் இருக்கும் பிடிவாதம் நாளாவட்டத்தில் எடுத்துச் சொன்னால் சரியாகிவிடும், போகப்போக தனது குணத்தை மாற்றிக் கொண்டு விடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் எப்போதும் அன்பாகப் பேசிப்பேசியே காரியத்தைச் சாதித்துக்கொள்ளும். அப்படிப் பிடிவாதமாய் இருக்கும் பிள்ளைகள் அப்பா அம்மா சண்டையிட்டுக் கொண்டால் இது நம்மால் வந்த பிரச்சனையோ என்று அஞ்சி பின்பு சரியாகி விடுவார்கள். பத்திலிருந்து பதினைந்து வயதிற்குள் மாறி விடுவார்கள். இவ்வயதையும் தாண்டிய குழந்தைகள் அப்படியேதான் இருப்பார்கள். அதைப் பிறவிக்குணம் அப்பா,அம்மா மாதிரி என்று பெற்றோரும் சமாதானமாகி விடுவார்கள். ஆனால் அது சரியல்ல. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கேற்ப மாற்ற முயற்சித்தால் நிச்சயம் மாறி விடுவார்