மூத்தப் பதிவருடன் சென்னைக்கு வந்த முதல் பதிவர்
இன்று மாலை மூன்று மணிக்கு எனக்கு அவசர அழைப்பு திரு.ரமணி அய்யா. மதுரை அவர்களிடமிருந்து "நான் சென்னை வந்துவிட்டேன் நான் உடனே புலவர் அய்யாவைப் பார்க்க முடியுமா என்று சொன்னார். உடனே எக்மோர் ரயில் நிலையம் சென்று அவரை புலவர் அய்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அங்கு முதன் முதலில் திரு .ரமணி அவர்கள்தான் பதிவர் திருவிழாவுக்கு வந்தார் எனபதை சுமார்.மாலை 4.15 க்கு புலவர்.அய்யா அவர்கள் உறுதி செய்தார். அதன்பின் இருவரும் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தார்கள்.எனக்கு ஏதோ புத்தகத்தில் படித்த ஞாபகம்.இருவரும் தொடர்ந்து பேசியதிலிருந்து எவ்வளவு பெரிய ஜாம்பவான்களிடம் நட்புப் பாராட்டியுள்ளேன் என்பதை நினைத்து அகமகிழ்ந்தேன். திரு.ரமணி அய்யா அவர்கள் ஈ.வே.ரா. பெரியாரின் பாட சாலையில் அவருடன் அன்பைப் பகிர்ந்து திருச்சியில் பயின்றவர் என்பதை அறிந்து மனம் மகிழ்ந்தேன்.அப்போதே பெரியாருடன் வீட்டில் தங்கி அவருக்கு பணிவிடைச் செய்தவர் என்பதை அறிந்து வியப்புற்றேன். அதுபோலவே புலவர் அய்யா அவர்கள் மாண்புமிகு.எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்தது பற்றியும் அவரின் ஆளுமைத்திறன் மற்றும் மனித நேய