தெய்வங்கள்

தெய்வங்கள்

மூத்தப் பதிவருடன் சென்னைக்கு வந்த முதல் பதிவர்

      இன்று மாலை மூன்று மணிக்கு எனக்கு அவசர அழைப்பு திரு.ரமணி அய்யா. மதுரை அவர்களிடமிருந்து "நான் சென்னை வந்துவிட்டேன் நான் உடனே புலவர் அய்யாவைப் பார்க்க முடியுமா என்று சொன்னார்.
 உடனே எக்மோர் ரயில் நிலையம் சென்று அவரை புலவர் அய்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.


அங்கு முதன் முதலில் திரு .ரமணி அவர்கள்தான் பதிவர் திருவிழாவுக்கு வந்தார்  எனபதை சுமார்.மாலை 4.15 க்கு புலவர்.அய்யா அவர்கள் உறுதி செய்தார்.

 அதன்பின் இருவரும் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தார்கள்.எனக்கு ஏதோ புத்தகத்தில் படித்த ஞாபகம்.இருவரும் தொடர்ந்து பேசியதிலிருந்து எவ்வளவு பெரிய ஜாம்பவான்களிடம் நட்புப் பாராட்டியுள்ளேன் என்பதை நினைத்து  அகமகிழ்ந்தேன்.

திரு.ரமணி அய்யா அவர்கள் ஈ.வே.ரா. பெரியாரின் பாட சாலையில்  அவருடன் அன்பைப் பகிர்ந்து திருச்சியில் பயின்றவர் என்பதை அறிந்து மனம்
மகிழ்ந்தேன்.அப்போதே  பெரியாருடன் வீட்டில் தங்கி அவருக்கு பணிவிடைச் செய்தவர் என்பதை அறிந்து வியப்புற்றேன்.

அதுபோலவே புலவர் அய்யா அவர்கள் மாண்புமிகு.எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்தது பற்றியும் அவரின் ஆளுமைத்திறன் மற்றும் மனித நேயம் பற்றி கூறியது  அவரின் பெருந்தன்மைக்கு சான்றாய் இருந்தது.

இருவரும் மாறிமாறி பேசியதிலிருந்து  பல விஷயங்கள் எனக்குப் புரிந்தன நான் நல்லோரிடம் பழகி வந்தேன் என்று மகிழ்ந்தேன் .. புதுப்புது விஷயங்களை பேசினர்கள் என்பதைவிட எனக்கு எவ்வாறு பெரியோர்களிடம் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரைத்ததுபோல் இருந்தது..

ஆனாலும் இருவரின் என்ன ஓட்டமே பதிவர் திருவிழாவை எப்படி சிறப்பாக நடத்துவது என்றே பேசினார்கள்.இறுதியில் புலவர் அய்யா இந்த விழாவை சிறப்பிக்க  ஆரூர்,மூனா.செந்திலும் .கவிஞர்.மதுமதியும் என்னுடன் பேசி வருவதிலிருந்து  மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடக்கும் என்பதில்
ஐய்யமில்லை ஆனால் அடுத்த வருட சந்திப்பு பற்றியே சிந்திக்கிறேன் என்று சொன்னது மகிழ்வாய் இருந்தது.

காரணம் இந்த வருடம் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையும் அடுத்த  வருடம் எப்படி சிறப்பாக நடத்துவது என்ற யோசனையில் புலவர் அய்யா உள்ளார் எனபதே எனக்குத் தெளிவாய் புரிந்தது.அதற்க்கு திரு.ரமணி அவர்கள். எல்லோரிடமும் பேசியப்பின் நிச்சயம் நீங்கள் எதிர்ப் பார்த்தபடி சிறப்பாகவே நடத்தலாம் என்று பட்டும் படாமலும் சொன்னார்,அது அவரது  முன் யோசனையையும் பெருந்தன்மையைக் காட்டுகிறது.எல்லோரையும்  கலந்தே முடிவு சொல்வதாக சொன்னார்.

ஆக மொத்தம் இருவருமே ஒத்தக் கருத்துடன் பதிவர் நலனையே குறிக்கோளாய்  கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நானறிந்த உண்மை. எனவே இருவரின் எதிர்ப்பார்புக்களுக்கிணங்க அனைவரும் ஒன்றிணைந்து நல்ல விஷயங்களுக்காகவும் நாம் இணைந்து  செயல் பட வேண்டியது அவசியமெனக் கருதுகிறேன்



Comments

  1. ரமணி ஐயா பற்றி புது தகவலை பகிர்ந்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்களா ராஜி .இன்னும் சொல்லுகிறேன்

      Delete
    2. அப்படிங்களா ராஜி .இன்னும் சொல்லுகிறேன்

      Delete
    3. வருகைக்கு நன்றிங்க ராஜி.நாளைச் சந்திப்போம்

      Delete
  2. முதலாக வருகை புரிந்த ரமணி ஐயாவிற்கு வணக்கம்! வருகை புரியும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க எப்ப வருவீங்க .நேரில் வாழ்த்துப் பறிமாறிகொள்ளலாம்

      Delete
  3. நல்ல தகவல் பகிர்வு...நண்பரே
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. விழா நெருங்கும் நாளில், பதிவர்களின் நெஞ்சத்துடிப்பை அதிகரிக்கும்வண்ணம் நேரடி வர்ணனை போன்று புதிய செய்திகளைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் விழாவுக்கு உயிரோட்டம் வேண்டுமே

      Delete
  5. நேரடி வர்ணனை மிக அழகு. நேரில் பார்த்த உணர்வு.

    ReplyDelete
    Replies
    1. நீங்க எப்போ வரவிருக்கிறீர்கள் ?

      Delete
  6. இருவரும் தொடர்ந்து பேசியதிலிருந்து எவ்வளவு பெரிய ஜாம்பவான்களிடம் நட்புப் பாராட்டியுள்ளேன் என்பதை நினைத்து அகமகிழ்ந்தேன்.

    சிறப்பான சந்திப்பு ..வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்கம்மா

      Delete
  7. இருவரும் மாறிமாறி பேசியதிலிருந்து பல விஷயங்கள் எனக்குப் புரிந்தன நான் நல்லோரிடம் பழகி வந்தேன் என்று மகிழ்ந்தேன் .. புதுப்புது விஷயங்களை பேசினர்கள் என்பதைவிட எனக்கு எவ்வாறு பெரியோர்களிடம் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரைத்ததுபோல் இருந்தது.//

    நல்லோரின் சந்திப்பு பகிர்வு அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  8. பெரியவர்கள் எப்பவும் ஒரு காரியத்தில் இறங்கினால் அது குறித்த சிந்தனையுடனேயே இருப்பார்கள் என்பது இவர்களின் பேச்சிலிருந்து தெரிகிறது...

    வாழ்த்துக்கள் தங்களுக்கும் ஐயாக்களுக்கும்...

    ReplyDelete
  9. பெரியோர் நட்பு! பெருமை தரும்! அருமையான பகிர்வு! நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்க எப்ப வருவீங்க ஆவலுடன் எதிர்பார்கிறேன்

      Delete
  10. சகோதரர் ரமணி அவர்களுடனும் புலவர் ஐயா அவர்களுடனும் உங்களின் சந்திப்பு பற்றி விபரமாக அறிய மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

    பதிவர் விழா இனிதே நடந்தேற அன்பு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி

      Delete
  11. ஒரு நாள் முன்னதாகவே பதிவர் திருவிழா தொடங்கி விட்டது மனதிற்கு மகிழ்வளிக்கின்றது. மூத்த பதிவர் இருவர் சந்தித்தாலே திருவிழா தொடங்கியதாகத்தானே அர்த்தம். பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி

      Delete
  12. நல்ல ஒரு விழா . இருவர் சந்திப்பும் சிறப்பு. பதிவர் உலகு சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more