மழையும் அதிகம் பெய்ததாலே.........
மழையும் அதிகம் பெய்ததாலே மரங்கள் சிரித்தே மகிழ்ந்தனவாம் மழைநீர் தேங்கி இருப்பதனால் மலர்கள் பூத்துச் சிரித்தனவாம் குளங்கள் எங்கும் நிறைந்ததாலே குளத்தில் தவளை கத்தியது கொக்கும் பாம்பும் பூச்சிகளை கொன்றே தின்று திரிந்தது பாம்பும் நிறையத் திரிந்ததாலே பறந்தே மயிலும் வந்தது பசியால் வாடிய கீரியும் பகிர்ந்தே பாம்பைத் தின்றது வனத்தில் எல்லா மிருகமும் வாழ்த்துப் பாட்டு பாடியே வருக மழையே என்றே வரிசையாகப் பாடி ஆடியது நரியும் பறவையும் இசையாக நல்ல சேதியைச் சொன்னது நலமாய் வாழப் பறவைகளும் நடனமாடி அன்பைப் பகிர்ந்தது ஆடும் மாடும் கூடியே ஆட்டம் போட்டு இருந்ததை அங்கே வந்த உழவனும் அதனுடன் சேர்ந்தே ஆடினான் எல்லா இனமும் ,மகிழ்ச்சியாக எளிதில் மனதும் குளிர்ச்சியாக நல்லாள் மழையால் இன்பமாக நன்றே வாழ முடிந்தது எல்லா வனங்களும் மரங்களாய் எல்லோர் மனதும் போலவே எங்கும் மரங்கள் வளர்த்தாலே என்றும் இதுபோல் மகிழலாம் .............கவியாழி,,,,,,,,,