மழையும் அதிகம் பெய்ததாலே.........
மழையும் அதிகம் பெய்ததாலே
மரங்கள் சிரித்தே மகிழ்ந்தனவாம்
மழைநீர் தேங்கி இருப்பதனால்
மலர்கள் பூத்துச் சிரித்தனவாம்
குளங்கள் எங்கும் நிறைந்ததாலே
குளத்தில் தவளை கத்தியது
கொக்கும் பாம்பும் பூச்சிகளை
கொன்றே தின்று திரிந்தது
பாம்பும் நிறையத் திரிந்ததாலே
பறந்தே மயிலும் வந்தது
பசியால் வாடிய கீரியும்
பகிர்ந்தே பாம்பைத் தின்றது
வனத்தில் எல்லா மிருகமும்
வாழ்த்துப் பாட்டு பாடியே
வருக மழையே என்றே
வரிசையாகப் பாடி ஆடியது
நரியும் பறவையும் இசையாக
நல்ல சேதியைச் சொன்னது
நலமாய் வாழப் பறவைகளும்
நடனமாடி அன்பைப் பகிர்ந்தது
ஆடும் மாடும் கூடியே
ஆட்டம் போட்டு இருந்ததை
அங்கே வந்த உழவனும்
அதனுடன் சேர்ந்தே ஆடினான்
எல்லா இனமும் ,மகிழ்ச்சியாக
எளிதில் மனதும் குளிர்ச்சியாக
நல்லாள் மழையால் இன்பமாக
நன்றே வாழ முடிந்தது
எல்லா வனங்களும் மரங்களாய்
எல்லோர் மனதும் போலவே
எங்கும் மரங்கள் வளர்த்தாலே
என்றும் இதுபோல் மகிழலாம்
.............கவியாழி,,,,,,,,,
வணக்கம்
ReplyDeleteஐயா
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//வனத்தில் எல்லா மிருகமும்
ReplyDeleteவாழ்த்துப் பாட்டுப் பாடியே
வருக மழையே என்றே
வரிசையாக பாடி ஆடியது//
ரசித்த வரிகள்!
நாம் எண்ணத்தில் எதிர்பார்க்கும் இயற்கையை நேரில் கண்டால் அதுதான் சொர்க்கம். சிலர் சொர்க்கமான கிராமத்தை விட்டுவிட்டு நரகமான நரகத்தில் குடியேறிக்கொண்டு நாங்கள் நாகரீகம் தெரிந்தவர்கள் என பிதற்றத்தான் செய்கின்றனர். கிணற்றுத்தவளையாய் வாழத்தெரிந்த அவர்களுக்கு உண்மையான சொர்க்கம் எதுவென தெரியாது... பணக்காரனாய் பட்டணத்தில் வாழ்வதைவிட காசில்லாட்டிக்கூட கிராமத்தில் வாழும் வாழ்க்கை உயர்வானது என எண்ணத்தொன்றுகிறது....
ReplyDelete- http://www.thamizhmozhi.net
வருகைக்கு நன்றி
Deleteமழையிலே நனைந்த சுகத்தை தந்தது உங்கள் கவிதை !
ReplyDeleteத.ம.3
வருகைக்கு நன்றி
Deleteஅருமை அருமை.. இயற்கை கவிதை மழையாய் கொட்டுகிறது!!
ReplyDeleteஆம் வருகைக்கு நன்றி
Deleteஎல்லா வனங்களும் மரங்களாய்
ReplyDeleteஎல்லோர் மனதும் போலவே
எங்கும் மரங்கள் வளர்த்தாலே
என்றும் இதுபோல் மகிழலாம்
மழையும் ,மகிழ்ச்சியும் ..!
மழையின் மூலம் நின்று போயிருந்த
ReplyDeleteஇயற்கையின் சுழற்சி மீண்டும்
செயல்படத் துவங்கியதைச்
சொல்லிப்போனவிதம் மிக மிக அருமை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
tha.ma
ReplyDeleteநன்றிங்க சார்
Deleteமனதில் மகிழ்ச்சி உண்டாக்கும் வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteமழை அதிகம் பெய்வதால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளம்போல் ஓடுவதையும் சொல்லியிருக்கலாமே! எவ்வளவுபேர் தவிக்கிறார்கள்! (ஓ, அதுபற்றி நாளை எழுதுவீர்களோ?)
ReplyDeleteஉங்களுக்கு அந்த பிரச்னை இல்லைஎன்பதை யாம் அறிவோம்
Deleteமழை என்றாலே மனதுக்கு இதம், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம், சூப்பர் அண்ணே...!
ReplyDeleteமனோ.தங்களின் வருகைக்கு நன்றி
Deleteஅருமையானக் கவிதை!
ReplyDeleteஆனாலும் ஹரிணி அவர்களின் செய்திதான் படித்துவிட்டு வந்ததால் அந்த வருத்தமும்... http://thanjavur-harani.blogspot.in/2013/11/blog-post_17.html
மழைக்கால மகிழ்ச்சியை அழகாய்ச் சொன்னீர்கள்!
ReplyDeleteவருகைக்கும் நன்றி
Deleteதங்கள் கவிதையைப் படித்ததும்
ReplyDeleteஇப்படி எழுதத் தோன்றிற்று!
மழையைக் கண்ட
நமக்கே கண்ணுக்குக் குளிர்ச்சியாம்
என் பிள்ளை விதைத்த
நெல்லு வயலெங்கும் முளைத்த
நெற்பயிருக்கு எவ்வளவு குளிர்ச்சியாம்?
மழையும் அதிகம் பெய்ததாலே
நம்ம
அறுவடைக்குப் பாதிப்பு இல்லையாமே?
அப்படி இதுவரைத் தகவலில்லை
Deleteமழை வரவேற்புக் கவிதை அருமை.
ReplyDeleteநன்றிங்க நண்பரே
Deleteஅங்கு நல்ல மழை கொண்டாட்டம் போல் இருக்கிறது.... இங்கு வேலூருக்கும் கொஞ்சம் அனுப்பி வைங்களேன்...!
ReplyDeleteஏதோ .சாருக்கு ஒரு ஊத்தாப்பம் பார்சல் என்பதுபோல் சொல்லிவிட்டீர்கள்
Deleteமழையால் மகிழ்ச்சி மனதினில். மனதின் மகிழ்ச்சி வரிகளில்!
ReplyDeleteVote +1
ReplyDeleteநன்றி
Deleteமழையை வரவேற்று அருமையான பாடல்.... ரசித்தேன்!
ReplyDeleteதங்களின் வருகையால் மகிழ்ந்தேன்
Delete