இறைவா எங்கே நீ இருக்கின்றாய்
இறைவா !எங்கே நீ இருக்கின்றாய் இதையும் பார்த்தும் சிரிக்கின்றாய் மறையோர் புலவர் இருந்தாலும் மனதைக் கெடுத்தே பாடுகின்றார் பலபேர் அறியா மொழியாலே பக்தி பாடலெனப் பாடுகிறார் சிலபேர் தமிழில் பாட வந்தால் சினமே கொண்டே தள்ளுகிறார் தட்டில் விழுகின்ற காசைப் பார்த்து தருவார் பூவும் குங்குமம் திருநீறுமே பொட்டில் அறைந்தது போல் பேசியுமே புறமே சற்றே தள்ளிச் சாடுகின்றார் மனமே வருந்தி வருவோரை தினம் மனதில் உன்னையே நினைப்போரை கனமே அருகில் பார்க்க விடாமல் கடிந்தே உடனே துரத்து கின்றார் இருந்தால் இதையும் பார்த்துக் கொண்டு எப்படி அங்கே நீ வாழுகின்றாய் தப்புகள் உனக்கும் தெரியலையா தண்டனை யாருக்கும் புரியலையா? (கவியாழி)