தெய்வங்கள்

தெய்வங்கள்

இறைவா எங்கே நீ இருக்கின்றாய்

இறைவா !எங்கே நீ இருக்கின்றாய்
இதையும் பார்த்தும் சிரிக்கின்றாய்
மறையோர் புலவர் இருந்தாலும்
மனதைக் கெடுத்தே பாடுகின்றார்

பலபேர் அறியா மொழியாலே
பக்தி பாடலெனப் பாடுகிறார்
சிலபேர் தமிழில் பாட வந்தால்
சினமே கொண்டே தள்ளுகிறார்

தட்டில் விழுகின்ற காசைப் பார்த்து
தருவார் பூவும்  குங்குமம் திருநீறுமே
பொட்டில் அறைந்தது போல் பேசியுமே
புறமே சற்றே தள்ளிச் சாடுகின்றார்

மனமே வருந்தி வருவோரை தினம்
மனதில் உன்னையே  நினைப்போரை
கனமே அருகில் பார்க்க விடாமல்
கடிந்தே உடனே துரத்து கின்றார்

இருந்தால் இதையும் பார்த்துக் கொண்டு
எப்படி அங்கே நீ  வாழுகின்றாய்
தப்புகள் உனக்கும் தெரியலையா
தண்டனை  யாருக்கும் புரியலையா?

(கவியாழி)



Comments

  1. அவர் என்ன செய்வா(தா)ர் பாவம்...!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் என்று எப்படி சொல்ல முடியும்

      Delete
  2. மனமே வருந்தி வருவோரை தினம்
    மனதில் உன்னையே நினைப்போரை
    கனமே அருகில் பார்க்க விடாமல்
    கடிந்தே உடனே துரத்து கின்றார்

    ஆகா ! அருமையான கருத்து! நிகழ்காலத்தில் நடக்கின்ற உண்மை!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அய்யா

      Delete
  3. மனமே வருந்தி வருவோரை தினம்
    மனதில் உன்னையே நினைப்போரை
    கனமே அருகில் பார்க்க விடாமல்
    கடிந்தே உடனே துரத்து கின்றார்//

    அப்படி துரத்தபடும் கோவிலுக்கு ஏன் போகவேண்டும்?
    கூட்டம் இல்லாத கோவில் ,விளக்கு போட ஆள் இல்லாத கோவில் போய் நிம்மதியாக கும்பிடலாம்..

    அருமையான கவிதை.

    ReplyDelete
    Replies
    1. திருப்பதிக்கு போகாத தமிழன் உண்டோ?

      Delete
  4. கடவுள் என்ன செய்வார் மனிதர் செய்யும் செயல்களுக்கு!

    ReplyDelete
  5. தட்டில் விழுகின்ற காசைப் பார்த்து
    தருவார் பூவும் குங்குமம் விபூதியுமே
    பொட்டில் அறைந்தது போல் பேசியுமே
    புறமே சற்றே தள்ளிச் சாடுகின்றார்

    100க்கு100 உண்மை கவிஞரே,,,

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே வியாபாரம்தான்

      Delete
  6. சின்னக் குழந்தை புன்னகையில்
       சிரிக்கும் மலரில் பிறர்க்காகத்
    தன்னைக் கொடுக்கும் பொதுநலத்தில்
       தவிப்பைத் துயரைப் போக்கிடவே
    மின்னும் மனிதப் பேருழைப்பில்
       மிஞ்சும் அன்பில் பங்குபெற
    என்னை மறந்தே இருந்தாலும்
       இறைவன் வருவேன் என்கின்றான்“

    அருமையான சிந்தனையைத் தூண்டும் வரிகள் அய்யா!
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகை என்னை இன்னும் சிறப்பாக எழுதத் தூண்டுகிறது நன்றி

      Delete
  7. இறைவனைப் பார்த்து நாம் ஏங்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் நம் பாதையில் போவோம். நிம்மதி நம்மைத் தேடி வரும்.

    ReplyDelete
  8. நல்ல கருத்துள்ள சிந்தனைமிக்க கவிதை வரிகள் நண்பரே!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை