கனவுகள் தரும் தொல்லை
உதிரிக் கனவுகளை நினைத்து உள்வாங்கி நினைத்தால் உண்மை யது புரியாது உறக்கம் மீண்டும் வாராது தெருவோரம் நடந்த நிகழ்வோ தென்றலென வீசும் காற்றோ வண்ண நிறம் கொண்ட வாசமுள்ள பூக்கள் வாசமன்றி உயிர் நீத்து மறைந்த உற்றாரும் பெற்றோருமே வந்து உண்மை ஏதோ சொல்ல உருப்படியாய் புரியாமல் இருக்கும் கற்பனையான கனவு வந்து கால மெல்லாம் வருத்த நற்பலனை அறிய வேண்டி நாலுபேரைக் கேட்டு தெளிய அத்த னைக்கும் காரணமாய் அனைவருமே மாற்றிச் சொல்லி நற்பலனாய் மட்டும் சொல்வர் நல்லதா கெட்டதா புரியாது ஆழ்மனதில் அடியெடுத்து ஆனந்தமாய் உறங்கும் போது நான் கண்ட கனவுகள் நல்ல பலன் தந்ததில்லை (கவியாழி)