கனவுகள் தரும் தொல்லை
உதிரிக் கனவுகளை நினைத்து
உள்வாங்கி நினைத்தால்
உண்மை யது புரியாது
உறக்கம் மீண்டும் வாராது
தெருவோரம் நடந்த நிகழ்வோ
தென்றலென வீசும் காற்றோ
வண்ண நிறம் கொண்ட
வாசமுள்ள பூக்கள் வாசமன்றி
உயிர் நீத்து மறைந்த
உற்றாரும் பெற்றோருமே வந்து
உண்மை ஏதோ சொல்ல
உருப்படியாய் புரியாமல் இருக்கும்
கற்பனையான கனவு வந்து
கால மெல்லாம் வருத்த
நற்பலனை அறிய வேண்டி
நாலுபேரைக் கேட்டு தெளிய
அத்த னைக்கும் காரணமாய்
அனைவருமே மாற்றிச் சொல்லி
நற்பலனாய் மட்டும் சொல்வர்
நல்லதா கெட்டதா புரியாது
ஆழ்மனதில் அடியெடுத்து
ஆனந்தமாய் உறங்கும் போது
நான் கண்ட கனவுகள்
நல்ல பலன் தந்ததில்லை
(கவியாழி)
உள்வாங்கி நினைத்தால்
உண்மை யது புரியாது
உறக்கம் மீண்டும் வாராது
தெருவோரம் நடந்த நிகழ்வோ
தென்றலென வீசும் காற்றோ
வண்ண நிறம் கொண்ட
வாசமுள்ள பூக்கள் வாசமன்றி
உயிர் நீத்து மறைந்த
உற்றாரும் பெற்றோருமே வந்து
உண்மை ஏதோ சொல்ல
உருப்படியாய் புரியாமல் இருக்கும்
கற்பனையான கனவு வந்து
கால மெல்லாம் வருத்த
நற்பலனை அறிய வேண்டி
நாலுபேரைக் கேட்டு தெளிய
அத்த னைக்கும் காரணமாய்
அனைவருமே மாற்றிச் சொல்லி
நற்பலனாய் மட்டும் சொல்வர்
நல்லதா கெட்டதா புரியாது
ஆழ்மனதில் அடியெடுத்து
ஆனந்தமாய் உறங்கும் போது
நான் கண்ட கனவுகள்
நல்ல பலன் தந்ததில்லை
(கவியாழி)
சரி தான்...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
உண்மை தான் சகோதரர். கனவுகள் பற்றி கவியா! கனவுகளை ஆய்வு செய்வதில் சிக்மன் பிராய்டையும் விஞ்சு விட்டூர்கள் போங்க. அற்புதமான கருத்தோட்டம் அழகான வரிகளில் வந்து அமர்ந்திருப்பது சிறப்பு. எண்ண ஓட்டங்கள் தான் கனவுகளாய் தொல்லை தரும் என்பார்கள். பகிர்வுக்கு நன்றி சகோதரர். தொடர்க..
ReplyDeleteஉண்மைதான் :)
ReplyDeleteகனவுகள் பற்றிய கவிதை அருமை! ஆழ்மனதின் உணர்வுகளே கனவுகள்! என்பார்கள்! நன்றாக விளக்கியது கவிதை!
ReplyDeleteநல்ல பலன்களைத் தரும் கனவுகள் வரட்டும்.. வாழ்த்துகிறேன்..
ReplyDeleteகவி(தை) ஆழம்..!!
ReplyDeleteநல்ல கருத்துள்ள கவிதை! கனவுகள் என்பது ஆழ்மனதில் விளைவதே அல்லாது அதற்கு பலன் எதுவும் இருப்பதாக அறிவியலில் விளக்கம் இல்லை! ஆனால் சிலர் அதன் பலனைக் கேட்டு நம்பி, மனதைக் குழப்பிக் கொள்வதுண்டு!
ReplyDeleteநல்ல கவிதைப் பகிர்வு!
கனவுகளைப் பற்றிய ஒவ்வொருவரின் சிந்தனையும் வித்தியாசமானதாகவே உள்ளதை பெரும்பாலும் காணமுடிகிறது. தவிரவும் அதில் நம்பிக்கையும் அடங்கும்.
ReplyDeleteபிரச்சினையான சமயங்களில் அதிக கனவுகள் வருவதுண்டு !
ReplyDeleteகனவுகளுக்குப் பலன் இருக்கிறதோ இல்லையோ, காரணம் இருக்கிறது! நம் ஆழ் மனதின் கவலைகள், எண்ணங்கள்!
ReplyDeleteஆழ்மனதில் அடியெடுத்து
ReplyDeleteஆனந்தமாய் உறங்கும் போது
நான் கண்ட கனவுகள்
நல்ல பலன் தந்ததில்லை//
அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 6
ReplyDeleteபகற்கனவு பலிக்காது என்பர்
ReplyDeleteஆனால்,
கனவு முழுவதும் பலிக்காது என்பதை
நம்பமுடியவில்லையே!
த.ம. +1
ReplyDelete