புயல் மழைக் காலங்களில்....
புயல் மழைக் காலங்களில் எங்கும் புறப்பட்டுச் சென்றாலே மூக்குச்சளி அழையாத நண்பனாக உறவாடும் ஆறுநாள் தொடந்தே இருக்கும் அடிக்கடித் தும்மலும் அடங்காது அழும்படி செய்து விடும் தலைவலி மிகுந்து வேலை செய்ய தடையாக இருந்தே தொல்லையாக்கும் கயல்விழிக் காது தொண்டை கரகரவென்றே இருந்தும் வலிக்கும் அயல்நாட்டு மருந்து தின்றும் அடங்காமல் தொடர்ந்து வரும் ஐங்கடுகு சூரணதைக் குடித்து அடிக்கடி மிளகு ரசம் பருகி துளசி தூதுவளை செடியின் தூய இலைதனை மென்றாலும் வயல் நண்டு ரசம் தொடர்ந்து வாரம் இருமுறை குடித்தால் வரும் துன்பம் நீங்கித் தீரும் வழக்கமான வேலைகள் தொடரும் (கவியாழி)