புயல் மழைக் காலங்களில்....
புயல் மழைக் காலங்களில் எங்கும்
புறப்பட்டுச் சென்றாலே மூக்குச்சளி
அழையாத நண்பனாக உறவாடும்
ஆறுநாள் தொடந்தே இருக்கும்
அடிக்கடித் தும்மலும் அடங்காது
அழும்படி செய்து விடும்
தலைவலி மிகுந்து வேலை செய்ய
தடையாக இருந்தே தொல்லையாக்கும்
கயல்விழிக் காது தொண்டை
கரகரவென்றே இருந்தும் வலிக்கும்
அயல்நாட்டு மருந்து தின்றும்
அடங்காமல் தொடர்ந்து வரும்
ஐங்கடுகு சூரணதைக் குடித்து
அடிக்கடி மிளகு ரசம் பருகி
துளசி தூதுவளை செடியின்
தூய இலைதனை மென்றாலும்
வயல் நண்டு ரசம் தொடர்ந்து
வாரம் இருமுறை குடித்தால்
வரும் துன்பம் நீங்கித் தீரும்
வழக்கமான வேலைகள் தொடரும்
(கவியாழி)
புறப்பட்டுச் சென்றாலே மூக்குச்சளி
அழையாத நண்பனாக உறவாடும்
ஆறுநாள் தொடந்தே இருக்கும்
அடிக்கடித் தும்மலும் அடங்காது
அழும்படி செய்து விடும்
தலைவலி மிகுந்து வேலை செய்ய
தடையாக இருந்தே தொல்லையாக்கும்
கயல்விழிக் காது தொண்டை
கரகரவென்றே இருந்தும் வலிக்கும்
அயல்நாட்டு மருந்து தின்றும்
அடங்காமல் தொடர்ந்து வரும்
ஐங்கடுகு சூரணதைக் குடித்து
அடிக்கடி மிளகு ரசம் பருகி
துளசி தூதுவளை செடியின்
தூய இலைதனை மென்றாலும்
வயல் நண்டு ரசம் தொடர்ந்து
வாரம் இருமுறை குடித்தால்
வரும் துன்பம் நீங்கித் தீரும்
வழக்கமான வேலைகள் தொடரும்
(கவியாழி)
அனுபவம் பலருக்கும் உதவும்...
ReplyDeleteஉண்மைதான்
Deleteசளித்தொல்லைக்கு கவி மருந்து சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சுரேஷ்
Deleteகவிதை போன்றே மருத்துவம் அருமை.
ReplyDeleteநன்றிங்க
Deleteஅட ஜலதோஷம் கூட கவிதை படைக்க உதவி விட்டது. நன்று
ReplyDeleteஎல்லாம் நீங்க கொடுக்கும் ஆதரவே காரணம்
Deleteவிரைவில் குணமாக வேண்டும் சளி பிடித்தாலே சனி பிடித்தது போல என்பர்!
ReplyDeleteநன்றிங்கய்யா
Deleteபயனுள்ள பதிவு ஐயா
ReplyDeleteநன்றி
நன்றிங்கயா
Deleteதம5
ReplyDeleteமருந்து சாப்பிட்டால் ஒரு வாரம் அவஸ்தை, சாப்பிடாவிட்டால் ஏழு நாட்கள் அவஸ்தை என்பார்கள்!
ReplyDeleteஇதுவும் ஒரு வைத்தியம்தான்
Deleteபயனுள்ள பதிவுகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன் பெற நல்ல யோசனைகள்.
ReplyDeleteநன்றிங்கய்யா
Deleteகவிதையில் மருத்துவம்
ReplyDeleteவித்தியாசமான முயற்சி
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ரசமிகு கவிதை! நண்டு சூப் ரெடி – என்று ஒரு டிபன் கடை வாசலில் தொங்கிய, சிலேட்டுப் பலகையில் எழுதி இருந்ததை பார்த்ததாக நினைவு.
ReplyDeleteத.ம.9
நண்டு சூப் நானும் சாப்பிட்டதில்லை
Deleteநன்றிங்கயா
ReplyDeleteகவிதையிலே நோயும் தீர்வும் அருமை அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கு நன்றி
Delete