என் அப்பாவுக்கு நன்றி சொல்வேன்..
எப்போதும் எந்நாளும் குடும்பமே என்றிருந்த என் அப்பாவுக்கு இப்போது நன்றி சொல்வேன் இதற்காகத் தலை குனிவேன் மழலையிலே மடியில் கிடத்தி மாறாத அன்பு கொண்டு பணிவிடைகள் பலதும் செய்து பாங்குற வளர்த்தத் தந்தையே தப்பேதும் நான் செய்தால் தவறையே சுட்டிக் காட்டி முப்போதும் அறிவுரைச் சொல்லி முறையாக என்னை வளர்த்தாய் தேவையறிந்து தேடித் தந்தாய் தெவிட்டாத இன்பம் தந்தாய் பூவையிணை மணம் முடித்து புதிய வாழ்கையும் அமைத்தாய் பொருள் சேர்க்கும் வழிமுறையும் பெரியோரின் மன நோக்கம் புரியும்படி சொல்லி வளர்த்தாய் புனிதனாய் என்னை பார்த்தாய் நாள்முழுதும் உழைத்தாய் நான் வளரப் பாடுபட்டு நல்வாழ்வை எனக்கு தந்த தோள் கொடுத்த தெய்வமே வணங்குவேன் உன்னை எப்போதும் வாழ்த்துக்காக குனிந்தே நிற்பேன் கனமும் உன்னை மறவேன் கடமையும் உம்போலச் செய்வேன்