தெய்வங்கள்

தெய்வங்கள்

என் அப்பாவுக்கு நன்றி சொல்வேன்..

எப்போதும் எந்நாளும் குடும்பமே
என்றிருந்த என் அப்பாவுக்கு
இப்போது நன்றி சொல்வேன்
இதற்காகத் தலை குனிவேன்

மழலையிலே மடியில் கிடத்தி
மாறாத அன்பு கொண்டு
பணிவிடைகள் பலதும் செய்து
பாங்குற வளர்த்தத் தந்தையே

தப்பேதும் நான் செய்தால்
தவறையே சுட்டிக் காட்டி
முப்போதும் அறிவுரைச் சொல்லி
முறையாக என்னை வளர்த்தாய்

தேவையறிந்து தேடித் தந்தாய்
தெவிட்டாத இன்பம் தந்தாய்
பூவையிணை மணம் முடித்து
புதிய வாழ்கையும்  அமைத்தாய்

பொருள் சேர்க்கும் வழிமுறையும்
பெரியோரின் மன நோக்கம்
புரியும்படி சொல்லி வளர்த்தாய்
புனிதனாய் என்னை பார்த்தாய்

நாள்முழுதும்  உழைத்தாய்
நான் வளரப் பாடுபட்டு
நல்வாழ்வை எனக்கு தந்த
தோள் கொடுத்த தெய்வமே

வணங்குவேன் உன்னை எப்போதும்
வாழ்த்துக்காக குனிந்தே நிற்பேன்
கனமும் உன்னை மறவேன்
கடமையும் உம்போலச் செய்வேன்

Comments

  1. வரிகள் சிறப்பு...

    தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தனபாலன்.உங்களுக்கும் வாழ்த்துக்கள்

      Delete
  2. அருமை..தந்தையர் தின வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க கிரேஸ்

      Delete
  3. கவிதை அருமை ஐயா . தங்களுக்கு இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் !!!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்திய உங்களுக்கு எனது ஆசிர்வாதங்கள் மற்றும் நன்றியும்

      Delete
  4. தந்தையர் தினத்துக்கு நல்லதொரு கவிதை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிங்க ராஜிமதி

      Delete
  5. அப்பாவை எண்ணிய இதயத்திற்கு, எனது தந்தையர் தின வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களும் வணக்கமும் நன்றியும் கூட

      Delete

  6. தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க பிரியா

      Delete
  7. வணங்குவேன் உன்னை எப்போதும்
    வாழ்த்துக்காக குனிந்தே நிற்பேன்
    கனமும் உன்னை மறவேன்
    கடமையும் உம்போலச் செய்வேன்

    தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்தியமைக்கும் வருகைகைக்கும் மகிழ்ச்சி

      Delete
  8. அருமை!
    தந்தையர் தின வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே

      Delete
  9. என் இனிய வாழ்த்துக்களும் இங்கே உரித்தாகட்டும் சகோதரரே !

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சகோ.வாழ்த்துக்கும் வருகைக்கும் மீண்டும் நன்றி

      Delete
  10. சிந்தை நிறைந்த தந்தையைப் புகழ்ந்தீர்
    முந்தை வினையின் முழுப்பலனே! சந்தையில்
    வாங்கும் பொருளல்ல வரமேதான் அவரருளால்
    தாங்குவீர் வாழ்வை துணிந்து!

    அழகு கவியில் மனம் மகிழ வணங்கி வழங்கிய கவி அருமை!
    உங்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் சகோதரரே!..

    த ம.8

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கணவருக்கும் வாழ்த்துக்கள்.அடுத்த வருடமும் அவர் கொண்டாட வாழ்த்துகிறேன்

      Delete
  11. அழகு...தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  12. தந்தையை சிறப்பிக்கும் வரிகள்! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க எஸ்.சுரேஷ்

      Delete
  13. நல்ல பதிவு! ஹூம்... எனக்குத்தான் நல்ல தந்தைக்கு குடுப்பினை இல்லாமல் போய்விட்டது.

    ReplyDelete
    Replies
    1. அப்படி நினைக்க வேண்டாம்.இப்போதுதான் அதை உணருகிறீர்கள்.உங்களை நல்லவனாய் வளர்க்க அவருக்கு மட்டும் ஆசை இல்லாமல் இருக்குமா? பதில் இங்கே சொல்லவும் (kandasan@gmail.com)

      Delete
  14. தந்தையர் தின சிறப்புப் பதிவு வெகு சீறப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சார் .உங்களுக்கும் எனது அன்பான தந்தையர் தின வாழ்த்துக்கள்

      Delete
  15. நல்ல பகிர்வு. அம்மா மேலான அன்பு நிரந்தரமாக இருந்தாலும் அப்பா மீதான புரிதலும் அன்பும் நடுவில் கொஞ்சம் காணாமல் போய் மறுபடி ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் வருகிறது! அப்பா..... அப்....ப்...பா!

    ReplyDelete
    Replies
    1. அப்பாவுக்கு நிகர் எப்போதும் யாருமே இருக்க முடியாது சில இடங்களில் சில நேரங்களில் மாறலாம்.இருந்தாலும் அப்பாவை மறவாதீர் அன்பு செய்வீர்

      Delete
  16. வணங்குவேன் உன்னை எப்போதும்
    வாழ்த்துக்காக குனிந்தே நிற்பேன்
    கனமும் உன்னை மறவேன்
    கடமையும் உம்போலச் செய்வேன்//
    அருமை.
    வணங்குவோம் தந்தையை.

    ReplyDelete
    Replies
    1. இடைவெளி விட்டு வந்தாலும் இணையதோழி கோமதிக்கு வணக்கம் வாழ்த்துக்களும்.அடிக்கடி வாங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more