மனமே. தினமே உன் குணமே
ஆற்றின் வழியைப்போல் தினமும் அகன்றே நெளிந்து விரிந்தும் மாற்று வழியில்லா மனமே மாற்றமே உனது வாழ்க்கையா போற்றும்போது புகழ்ந்தே இருக்கிறாய் பூரிப்பால் கனிந்தே புன்னகையாகிறாய் நேற்று நடந்ததை மறந்துவிடுகிறாய் நிம்மதியாய் மகிழ்ச்சியில் சிரிக்கிறாய் ஏற்றம் கொண்டாலும் மகிழ்கிறாய் ஏமாந்து போனாலும் அழுகிறாய் தூற்றும்போது கோபம் கொள்கிறாய் துடித்தெழுந்தே தீயாய் எரிக்கிறாய் தோற்றதால் துவண்டு விழ்கிறாய் தோல்வியால் துள்ளி எழுகிறாய் ஊற்றுவழி தெரிந்தும் உண்மையாய் ஒன்றும் யரியாது வாழ்கிறாய் மாற்றம் தேவையெனில் அழிக்கிறாய் மாறியதும் உடனே அமைதியாகிறாய் மக்கள் வாழவும் வழியாக்கும்நீ மனதில் நலமாய் தங்கிடு ஏய் மனமே ...... இனிமேல் மாறிவிடு மனிதனை வாழவிடு மனதில் நிம்மதி கொடு