தெய்வங்கள்

தெய்வங்கள்

மனமே. தினமே உன் குணமே

ஆற்றின் வழியைப்போல் தினமும்
அகன்றே நெளிந்து விரிந்தும்
மாற்று வழியில்லா மனமே
மாற்றமே உனது வாழ்க்கையா

போற்றும்போது புகழ்ந்தே இருக்கிறாய்
பூரிப்பால்  கனிந்தே புன்னகையாகிறாய்
நேற்று நடந்ததை மறந்துவிடுகிறாய்
நிம்மதியாய்  மகிழ்ச்சியில் சிரிக்கிறாய்

ஏற்றம் கொண்டாலும் மகிழ்கிறாய்
ஏமாந்து போனாலும் அழுகிறாய்
தூற்றும்போது கோபம் கொள்கிறாய்
துடித்தெழுந்தே தீயாய் எரிக்கிறாய்

தோற்றதால் துவண்டு விழ்கிறாய்
தோல்வியால்  துள்ளி எழுகிறாய்
ஊற்றுவழி தெரிந்தும் உண்மையாய்
ஒன்றும் யரியாது வாழ்கிறாய்

மாற்றம் தேவையெனில் அழிக்கிறாய்
மாறியதும் உடனே அமைதியாகிறாய்
மக்கள் வாழவும் வழியாக்கும்நீ
மனதில் நலமாய் தங்கிடு


ஏய் மனமே ......
இனிமேல்  மாறிவிடு
மனிதனை வாழவிடு
மனதில் நிம்மதி கொடு





Comments

  1. நன்றிங்க சார்

    ReplyDelete
  2. நம் மனதில் மாறுதல் வேண்டுமென நினைத்தால் மாறுதல் வரும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை !

    ReplyDelete
    Replies
    1. சில நேரங்களில் நாம் மட்டுமே நினைக்கலாம் ஆனால் முடியாது காரணம் நமது நிம்மதி அடுத்தவர் கையில் அல்லவா உள்ளது?

      Delete
  3. ஆம், மனம்தான் அனைத்திற்கும் காரணம்.

    ReplyDelete
    Replies
    1. அவயங்களை மாற்றலாம் மனதுக்கு மாற்று இல்லையே?

      Delete
  4. உண்மை தான்! அனைத்து துன்பங்களுக்கும் மனம் தான் காரணம்! நல் வழிச்சிந்தனைகளில் மனம் தங்கி விடும்போது அதே துன்பங்கள் இன்பங்களாகி விடுகின்றன‌! அருமையான கவிதை!!

    ReplyDelete
    Replies
    1. என்ன சிந்தித்தாலும் காயம்பட்ட மனசு ஆறாது.மனதை விட்டு அகலாது.

      Delete
  5. மிகவும் கடினமான ஒன்றை எளிதாகச் சொல்லிவிட்டீர்கள். மனம் மாறுமா?

    ReplyDelete
    Replies
    1. மாறாது மாறவும் முடியாது.எல்லோருக்குமே உள்ளது எளிதில் சொல்ல முடியாதது

      Delete
  6. ஏய் மனமே ......
    இனிமேல் மாறிவிடு
    >>
    அவராவது மாறுறதாவது?! அவர் மாறிட்டா அப்புறம் நாமெல்லாம் நிம்மதியா இருப்போமே!!

    ReplyDelete
    Replies
    1. நம்ம நிம்மதியை கெடுக்கும் நம்மோடவே வாழ்ந்துவரும்

      Delete
  7. கவிதைக்கு நல்வாழ்த்து.
    சில வரிகள்......
    1.மாற்றம்
    2.எதார்த்தம்
    3.முடியவில்லை
    4.தெரிந்தும்
    5.கவலை
    இவற்றை கடந்தால் வாழ்கை வளமாகும் இது தான் புரிந்தது நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது அனைத்தும் உணமைதான்.அதற்குள் நமது வாழ்வும் முடிந்துவிடும்

      Delete
  8. மனம் படுத்தும் பாடு நற் கவிதையாக.

    ReplyDelete
    Replies
    1. பாடாய் படுத்தும் பார்க்க முடியாத பொருள்தான் நம் மனம்

      Delete
  9. மனத்தையே மனதில் நிம்மதி கொடுக்க சொல்கிறீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. வேறு என்ன கட்டளையிடவா முடியும் ?

      Delete
  10. ஏய் மனமே ......
    இனிமேல் மாறிவிடு
    மனிதனை வாழவிடு
    மனதில் நிம்மதி கொடு//

    அப்படியே மாறினாலும்.....சூரியன் மேற்கிலும் சந்திரன் கிழக்கிலும் உதித்துவிடும்.... உசுரோட இருக்கறவரைக்கும் உடன் இருந்தே கொல்லும் ஒரு ஜீவன் இந்த மனசுதாங்க...

    ReplyDelete
    Replies
    1. சரியா சொன்னீங்க கூடவே இருந்து கும்மியடிக்கும் பேராசைக்காரன்.நாசக்காரன்

      Delete
  11. மனத்தின் வழி மாயை உணரக்
    குணத்தின் செயல் கூறு!

    மனமது அடங்காது. நல்ல சிந்தனை.
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. ஆம்.உண்மைதான்.மனமொரு மாயைதான். தினம்தினம் வாழத்தான் வேண்டும்

      Delete
  12. மனமே ......
    இனிமேல் மாறிவிடு
    மனிதனை வாழவிடு
    மனதில் நிம்மதி கொடு

    மனம் மாறி நிம்மதி பிறக்கட்டும்..!

    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்குமே பிறக்கட்டும் நிம்மதியாய் பிழைக்கட்டும்

      Delete
  13. மனம் குறித்த கவிதை
    மனம் கவர்ந்தது

    ReplyDelete
  14. மனமொரு மந்திரக்குழல் தான் புலவரே...

    ReplyDelete
    Replies
    1. ஆம்.மந்திரமும் செய்யும் மாயமும் செய்யும் தந்திரக்காரன் மனமே.

      Delete

  15. அதான் மனம் ஒரு குரங்கு என்று அப்பவே சொன்னார்களோ ?

    ReplyDelete
    Replies
    1. எப்படியும் சொல்லலாம் .நீங்க சொன்னதுதான் சரி

      Delete
  16. ஏய் மனமே ......
    இனிமேல் மாறிவிடு
    மனிதனை வாழவிடு
    மனதில் நிம்மதி கொடு//

    மறுவது மனம்.

    கால்ம் ஆற்றும் ரண்ம்.
    தேறுவதும் மனம் தான்.
    நல்ல கவிதை.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more