கட்டிளங் காளையரும்.....
கொட்டி மழைப் பொழிகிறதே கொட்டோ வென்றே குடையெல்லாம் பறக்கிறதே அய்யோ வென்றே தட்டிவீடும் நனைகிறதே சொட்டுசொட் டென்று-ஏழைக்கு தங்குமிடம் கிடைக்கவில்லை எங்கும் சென்றே பட்டித் தொட்டி கழனியெல்லாம் வெள்ளமாக பயிரெல்லாம் அழுகுவதால் உள்ளம் ஏனோ கட்டவிழ்ந்த நிலையில் மனதைக் கண்டு-விவசாயி கண்ணீரில் நீந்துகிறான் கனத்த மழையால் கட்டிளங் காளையரும் நொந்து போக காடுமேடு இருப்பதுபோல் சாலை யெங்கும் திட்டுத்திட்டாய் இருக்கிறதே எல்லா திசையும்-வேலைக்குத் திட்டிக்கொண்டே செல்லுகிறார் சாலையிலே விட்டுவிட்டு மழைப் பெய்வதாலே பெண்கள் வீட்டில் இருந்தால் எல்லோருக்குமே கும்மாளமாம் கெட்டிக்கார கணவன் மார்கள் மகிழ்ச்சியாக-இன்று கேட்டதெல்லாம் வாங்கித்தருவார் மகிழ்ச்சியாக (கவியாழிகண்ணதாசன்)