தெய்வங்கள்

தெய்வங்கள்

கட்டிளங் காளையரும்.....

கொட்டி மழைப் பொழிகிறதே கொட்டோ வென்றே
 குடையெல்லாம் பறக்கிறதே அய்யோ வென்றே
தட்டிவீடும் நனைகிறதே சொட்டுசொட் டென்று-ஏழைக்கு
 தங்குமிடம் கிடைக்கவில்லை  எங்கும் சென்றே

பட்டித் தொட்டி கழனியெல்லாம் வெள்ளமாக
பயிரெல்லாம் அழுகுவதால் உள்ளம் ஏனோ
கட்டவிழ்ந்த  நிலையில் மனதைக் கண்டு-விவசாயி
கண்ணீரில் நீந்துகிறான் கனத்த மழையால்

கட்டிளங் காளையரும்  நொந்து போக
காடுமேடு இருப்பதுபோல் சாலை யெங்கும்
திட்டுத்திட்டாய் இருக்கிறதே எல்லா திசையும்-வேலைக்குத்
திட்டிக்கொண்டே செல்லுகிறார் சாலையிலே

விட்டுவிட்டு மழைப் பெய்வதாலே பெண்கள்
வீட்டில் இருந்தால் எல்லோருக்குமே கும்மாளமாம்
கெட்டிக்கார கணவன் மார்கள் மகிழ்ச்சியாக-இன்று
கேட்டதெல்லாம் வாங்கித்தருவார் மகிழ்ச்சியாக

(கவியாழிகண்ணதாசன்)




Comments

  1. பொழிகிறது மழை.
    த ம இரண்டு

    ReplyDelete
  2. வான் மழை போதாதென்று விவசாயியின் கண்ணீரும் சேர்கிறது வெள்ளத்தோடு ....

    ReplyDelete
  3. மழை பொழிந்தால் கொண்டாட்டம்! அதே சமயம் திண்டாட்டமும்! அருமையாக சொல்கிறது கவிதை! நன்றி!

    ReplyDelete
  4. கவிதை மழையா!

    ReplyDelete
  5. நடைமுறை யதார்த்தம் தங்களது கவிதையில்,,,,
    மழையாய்....
    அருவியாய்.....
    அருமையாய்.....

    ReplyDelete
  6. அருமையான கவிதை அய்யா!
    பகிர்வுக்கு நன்றி.
    த ம 4

    ReplyDelete
  7. கன மழையின் தாக்கம் குறித்து
    அருமையான ஆக்கம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. கவிதை மழை ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மழைக்காலத்தில் கணவன், அலுவலகம் போகாமல் வீட்டில் இருந்தால் என்னவெல்லாமோ நடக்க வாய்ப்புண்டு என்று மனைவியருக்குத் தெரியாதா! வாய்ப்பைப் பயன் படுத்தி வாக்குறுதியை பெறும் சாமர்த்தியம் கைகேயி காலத்தில் இருந்தே வருவது தானே!

    ReplyDelete
  10. கவிதையில் கனமழை ஐயா...

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை