மனிதனாக வாழ்க்கை முடியுமே
விலைவாசித் தாறுமாறா ஏறுது விடிந்தாலே கடனெல்லாம் அழைக்குது தரவேண்டிய வட்டியும் சேர்த்ததும் தலைமேல முடியெல்லாம் கொட்டுது பணக்காரன் வசதியும் பெருகுது பணத்தாலே எல்லாமே முடியுது மருந்தாலே வாழ்கையை ஒட்டியும் மளமளன்னு பணமோ சேருது விலைவாசி உயர்வை எண்ணியே விவசாயி மனசும் எரியுது நிலமெல்லாம் தண்ணீர் குறைச்சலால் நெடுந்துயர்ந்த வீடாய் மாறுது பிழையாக படிக்க மறந்த பிள்ளையின் மனசும் தவிக்குது நெடுநாட்கள் படிப்பை முடித்தும் நிம்மதியாக வேலை மறுக்குது அரசாங்கம் கடமை தவறியே அநியாயம் வளர தொடங்குது அதனாலே பலபேரின் வாழ்க்கை அடங்காத செயலைத் தூண்டுது பலபேர்கள் மடிந்து சாவதற்கு பணம் ஏனோ தகுதியாகுது மனம்மாறி பகிர்ந்து வாழ்ந்தாலே மனிதனாக வாழ்க்கை முடியுமே (கவியாழி)