ஆழ் மனது ....
ஆழ்ந்த மனதுக் குள்ளே
அன்புடன் கோபமும் இருக்கும்
ஆனாலும் அப்பப்போ வெடிக்கும்
அதனால் மனது வலிக்கும்
தாழ்ந்த நிலையினால் அது
தன்னையே தரம் தாழ்த்திவிடும்
தானாகப் பேசவும் ஏசவும்
தனிமையை நாடிக் கொல்லும்
வீணான கற்பனையை வளர்க்கும்
விவேகமற்ற வேதனையைத் தரும்
வீண்பேச்சு ஏளனத்தை மதிக்கும்
விடிவில்லா சந்தேகம் வகுக்கும்
ஆண் பெண்களைச் சேர்க்கும்
ஆபத்தில் கொண்டுவிடும்
ஊன் உறக்கம் தவிர்க்கும்
உடன்பாடு இல்லாதுப் பிரிக்கும்
தான் கெட்டு தவித்தும்
தனைச்சார்ந்தோரையும் கெடுக்கும்
வீணான மனபிழற்ச்சி தரும்
வேதனையும் இழப்பும் மிகும்
ஏனிந்த மனநிலை இறைவா
எப்படி தவிக்கிறார் புரியுமா
தவிர்க்க வழிதான் தெரியுமா
தவிப்போரைக் காப்பாற்ற முடியுமா
அன்புடன் கோபமும் இருக்கும்
ஆனாலும் அப்பப்போ வெடிக்கும்
அதனால் மனது வலிக்கும்
தாழ்ந்த நிலையினால் அது
தன்னையே தரம் தாழ்த்திவிடும்
தானாகப் பேசவும் ஏசவும்
தனிமையை நாடிக் கொல்லும்
வீணான கற்பனையை வளர்க்கும்
விவேகமற்ற வேதனையைத் தரும்
வீண்பேச்சு ஏளனத்தை மதிக்கும்
விடிவில்லா சந்தேகம் வகுக்கும்
ஆண் பெண்களைச் சேர்க்கும்
ஆபத்தில் கொண்டுவிடும்
ஊன் உறக்கம் தவிர்க்கும்
உடன்பாடு இல்லாதுப் பிரிக்கும்
தான் கெட்டு தவித்தும்
தனைச்சார்ந்தோரையும் கெடுக்கும்
வீணான மனபிழற்ச்சி தரும்
வேதனையும் இழப்பும் மிகும்
ஏனிந்த மனநிலை இறைவா
எப்படி தவிக்கிறார் புரியுமா
தவிர்க்க வழிதான் தெரியுமா
தவிப்போரைக் காப்பாற்ற முடியுமா
உங்கள் ஆதங்கம் புரிகிறது...
ReplyDeleteஎல்லோருக்குமே பொதுவானது .ஆழ் மனதும் ஒரு அதிசயமே
Deleteமனித உணர்வுகளை அழகாக படம் பிடிக்கிறது கவிதை! அதை தவிர்க்க முடியாமல்தான் பலருக்கு சிக்கலே ஏற்படுகிறது! அருமையான படைப்பு நன்றி!
ReplyDeleteஉண்மையில் தெளிவாக இருந்தால் எல்லாப் பிரச்சனைகளையும் எதிர்கொள்ளமுடியும்
Deleteஉண்மைதான்...
ReplyDeleteஆழ்மனதைப் பற்றி நிறையபேருக்குப் புரிவதில்லை
Deleteஆழமானது புரிந்து கொள்ள முடியாதது. நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்
ReplyDeleteஆஹா.தெரிந்துவிட்டீர்களா.வருகைக்கு நன்றிங்க நண்பரே
Deleteஉண்மைகள்... வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஎப்படித்தான் மனதை மாற்றிச் செயல்பட வைத்தாலும் அடிமனம் மாறாது.அதுதான் இயல்பு !
ReplyDeleteஎன்ன பாக்கியம் செய்தேனோ? இன்று ஹேமாவின் வருகைக்காக.நன்றி தொடர்ந்து வாங்க
Deleteஆழ் மனதல்லவா அப்படித்தான் இருக்கும்.
ReplyDeleteமேலே எவ்வளவு அலை மோதினாலும் ஆழக்கடலில் படிந்திருக்கும் படிமங்களை கணக்கிட முடியாது சகோ!
நல்ல கற்பனை!
வாழ்த்துக்கள்!
நான் சொல்வது உண்மைகளை மட்டுமே.உங்களுக்கும் புரிந்திருக்கும்.ஹேமாவை அழைத்து வந்தமைக்கு நன்றி சகோ.
Deleteபெண் மனசுதான் ஆழம்ன்னு சொல்லி சொல்லி வெறுப்பேத்துவீங்க. இப்போ உங்க மனசும் கூட..., ?!
ReplyDeleteஇதுப் பொதுவாக சொன்ன விஷயம் எப்போதும் உங்களை ஜெயிக்க முடியாது என்பதுதான் உண்மை
Delete
ReplyDeleteவணக்கம்!
ஆழ்மனக் பாட்டினை ஆழ்ந்து படித்திட்டால்
தாழ்மனம் நீங்கும் தகா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
உண்மைதான் ஆழ்மனது கவலைகளை மறந்தால் நிம்மதியாய் இருக்கலாம்.வருகைக்கு நன்றிங்க
Deleteஆழ்மனம் குறித்த ஆழ்ந்த சிந்தனை
ReplyDeleteமனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
ஆம்,ஆழ்மனதைப் பற்றி அறிந்துகொண்டால் கவலையை களையலாம்
Deletetha.ma 9
ReplyDeleteஆழ்மனதின் அற்புதங்களை அளவிட முடியுமா என்ன?
ReplyDeleteமுடியாது.மறக்கவும் அழிக்கவும் தடையில்லை
Deleteஅதான் கமல் தேவர் மகன் படத்தில் அழகாக சொல்கிறார் போலும் "உனக்குள்ளே நடமாடிட்டு இருக்குற மிருகம் எனக்குள்ளே உறங்கிட்டு இருக்கு தட்டி எழுப்பிராத அது உனக்கும் எனக்கும் நல்லதில்ல" சரிதானோ ?
ReplyDeleteஆழ்மனதின் கட்டளையே அனைத்துச் செயல்களுக்கும் காரனமாக்கும்
Deleteஆழ்மனதிப் அலைகளை அளவிட முடியாதுதான்.
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றிங்க
Deleteஆழ்ந்த மனதுக் குள்ளே
ReplyDeleteஅன்புடன் கோபமும் இருக்கும்//
யாரிடம் அன்பு செலுத்துகிறோமோ அவர்கள் மீதுதான் கோபமும் வரும்...உரிமையுடன்.. அழகான வரிகள்!
உண்மைதான்
Deleteகடினம்தான்
ReplyDeleteஅருமை
என்ன செய்வது?
Delete
ReplyDeleteமனம் என்பதுதான் என்ன.?எண்ணங்கள் உருவாகும் இடம் எனலாமா.?அதற்கு இடம் என்று ஒன்றிருக்கிறதா. ,?அது ஆழத்தில் இருக்கிறதா, மேலோடு இருக்கிறதா, அதைக் கட்டுப் படுத்த முடியுமா, உணர்ச்சிகளின் வெளிப்பாடு அல்லது புறப்பாடு ஆழ்மனம் என்கிறீர்களா.? நிறையக் கேள்விகள் கிளப்பி விட்டீர் நண்பரே. வாழ்த்துக்கள்.
ஆழ்மனதைநன்றாய்படித்தமைக்குநன்றி
ReplyDeleteஆழ் மனதின் சிந்தனை வரிகள் அருமை கண்ணதாசன்....
ReplyDeleteவிழித்திருக்கும்போது நாம் பேசும் பேச்சுகளும், நம் செயல்களும் இருப்பது போல் நாம் ஆழ் மனதில் இருக்குமா என்று கேட்டால் நூறு சதவீதம் இருக்க இயலாது என்றே தான் சொல்லமுடிகிறது உங்கள் கவிதை வரிகள் படித்தப்பின்...
சிந்தனைகள் எப்போதும் ஆழ்மனதிலும் நல்லவையாக இருக்கும்போது அது நமக்கும்.. நம்மைச்சுற்றி இருப்போருக்கும் நல்லதையே பகிர இயலும்.. திரும்ப கிடைப்பதும் நல்லவையாகவே இருக்கிறது....
தீய சிந்தனைகளின் தாக்கம் மனதை ஆக்கிரமித்துவிட்டால்.... அது நம்மை தீய வழிக்கு இழுப்பது எளிதாகிவிடும்...
இப்படி செல்லாமலிருக்க சுயக்கட்டுப்பாடு எத்தனை அவசியம் என்பதை சொல்லி உணர்த்திய வரிகள் சிறப்பு... அருமையான கவிதை வரிகள் கண்ணதாசன்.
தாமதமாய் வந்தாலும் தரமான விளக்கமும் கவிதையின் நோக்கமும் புரிந்தமைக்கு நன்றி
Delete
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நீண்ட நாள் கழித்து
Deleteநேரம் கிடைத்துப் படித்த
தமிழே கம்பன் புகழே
நன்றி நன்றி நன்றி