மனிதம் போற்றி வாழுங்களேன்
இனமே தமிழன் என்றுரைத்து எதிலும் சேர்ந்தே முடிவெடுத்துப் பணமோ மதமோ பாராமல்-நட்பை போற்றி தினமே வாழுங்களேன் அண்ணன் தம்பி உறவுகளாய் அனைவரும் கூடி வாழ்வதனால் திண்ணைதோறும் நட்புறவாய்-அன்பை தினமும் போற்றி மகிழ்ந்திடலாம் உறவை மறுத்து வாழ்வதனால் உயர்வும் மகிழ்வும் தடையாகும் பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப் பிணைந்தே மகிழ்ந்தே வாழுங்கள் மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே மனித நேயம் தெரியுமே மக்கள் மனதை அறியுமே-உறவை மானிடம் போற்றி மகிழுமே சாதியும் மதமும் சொல்கிறது சரிசமம் உயிரென உயர்வாக நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும் நித்தம் சொல்வதும் இதைத்தானே மனித நேயம் வேண்டாமென மதமும் எங்கும் சொன்னதில்லை மனிதனாக வாழ்வதற்கு -நீங்களும் மனிதம் போற்றி வாழுங்களேன்