குழந்தைப் பாட்டைப் பாடுங்கள்
 பூஜ்யமும் ஒன்றும் ஒன்று  புவியில் பிறந்திட்டாய்  இன்று  0+1=1   ஒன்றும் ஒன்றும் இரண்டு  அப்பா அம்மா இரண்டு  1+1=2  இரண்டும் ஒன்றும் மூன்று  உன்னோடு சேர்த்து மூன்று  2+1=3  மூன்றும் ஒன்றும் நான்கு  பாப்பா பிறந்தால் நான்கு  3+1-4  நான்கும் ஒன்றும் ஐந்து  தாத்தா பாட்டியும் ஐந்து  4+1=5  ஐந்தும் ஒன்றும் ஆறு  நண்பனைச் சேர்த்தால் ஆறு  5+1=6  ஆறும் ஒன்றும் ஏழு  புறப்படும் நேரம் ஏழு  6+1=7  ஏழும் ஒன்றும் எட்டு  படிப்பில் கவனத்தை எட்டு  7+1=8  எட்டும் ஒன்றும் ஒன்பது  தூங்க செல்வாய் ஒன்பது  8+1=9  ஒன்பதும் ஒன்றும் பத்து  உணரும் வயதும் பத்து  9+1=10  
