தெய்வங்கள்

தெய்வங்கள்

குழந்தைப் பாட்டைப் பாடுங்கள்

பூஜ்யமும் ஒன்றும் ஒன்று
புவியில் பிறந்திட்டாய்  இன்று
0+1=1

ஒன்றும் ஒன்றும் இரண்டு
அப்பா அம்மா இரண்டு
1+1=2
இரண்டும் ஒன்றும் மூன்று
உன்னோடு சேர்த்து மூன்று
2+1=3
மூன்றும் ஒன்றும் நான்கு
பாப்பா பிறந்தால் நான்கு
3+1-4
நான்கும் ஒன்றும் ஐந்து
தாத்தா பாட்டியும் ஐந்து
4+1=5
ஐந்தும் ஒன்றும் ஆறு
நண்பனைச் சேர்த்தால் ஆறு
5+1=6
ஆறும் ஒன்றும் ஏழு
புறப்படும் நேரம் ஏழு
6+1=7
ஏழும் ஒன்றும் எட்டு
படிப்பில் கவனத்தை எட்டு
7+1=8
எட்டும் ஒன்றும் ஒன்பது
தூங்க செல்வாய் ஒன்பது
8+1=9
ஒன்பதும் ஒன்றும் பத்து
உணரும் வயதும் பத்து
9+1=10

Comments

  1. அட...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.
    பாடல் அருமையாக உள்ளது இரசித்தேன்...வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்
    ஐயா.

    த.ம 4வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. எண் சொல்லிக்கொடுக்கும் குழந்தைப்பாடல் அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. குழந்தைகளுக்கு எளிதில் பதிவும் வகையில் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்ல முயற்சி..... பாராட்டுகள்.

    ReplyDelete
  8. அருமையான பாடல் ஐயா நன்றி

    ReplyDelete
  9. அட கணக்குக்கவிதை.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அடடே.. குழந்தைப் பருவத்தில் கணக்குச் சொலலித்தரும்போதே கூட்டுக்குடும்ப அழகையும் சொலலித்தரும் நயத்தை ரசித்தேன்.

    ReplyDelete
  11. அருமை ஐயா..தாத்தாவும் பாட்டியும் ஒன்றென்று சொன்னதை ரசித்தேன்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்