அவளன்றி மகிழ்வேது
அன்பானவள் எனக்கே அழகானவள் அனைத்திலும் என்னை அறிந்தவள் பண்பும் தெரிந்தவள் பாசக்காரி பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி எப்போதும் என்னையே சார்ந்தவள் எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள் முன்கோபம் வந்தால் பத்ரகாளி முடியாத நேரத்தில் பங்காளி முன்பொழுதில் தினம் எழுவாள் மூன்று வேலையும் சமைப்பாள் முகம் மலர்ந்தே உணவை முன்னே வந்து பகிர்வாள் கட்டளைப் போடும் எசமானி கஷ்டம் வந்தால் உபதேசி சித்திரை வெயிலாய் சிலநேரம் சிடுசிடு வென்றே தகதகப்பாள் ஆனாலும் எப்போதும் அன்பானவள் அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள் அவளன்றி வாழ்வே இருக்காது அருகின்றி எனக்கே மகிழ்வேது (கவியாழியின் மறுபதிவு)