அவளன்றி மகிழ்வேது
அன்பானவள் எனக்கே அழகானவள்
அனைத்திலும் என்னை அறிந்தவள்
பண்பும் தெரிந்தவள் பாசக்காரி
பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி
எப்போதும் என்னையே சார்ந்தவள்
எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள்
முன்கோபம் வந்தால் பத்ரகாளி
முன்பொழுதில் தினம் எழுவாள்
மூன்று வேலையும் சமைப்பாள்
முகம் மலர்ந்தே உணவை
முன்னே வந்து பகிர்வாள்
கட்டளைப் போடும் எசமானி
கஷ்டம் வந்தால் உபதேசி
சித்திரை வெயிலாய் சிலநேரம்
சிடுசிடு வென்றே தகதகப்பாள்
ஆனாலும் எப்போதும் அன்பானவள்
அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள்
அவளன்றி வாழ்வே இருக்காது
அருகின்றி எனக்கே மகிழ்வேது
(கவியாழியின் மறுபதிவு)
அனைத்திலும் என்னை அறிந்தவள்
பண்பும் தெரிந்தவள் பாசக்காரி
பழகுவதில் சிலநேரம் ரோசக்காரி
எப்போதும் என்னையே சார்ந்தவள்
எவ்விடமும் உரிமையாய் திட்டுபவள்
முன்கோபம் வந்தால் பத்ரகாளி
முடியாத நேரத்தில் பங்காளி
முன்பொழுதில் தினம் எழுவாள்
மூன்று வேலையும் சமைப்பாள்
முகம் மலர்ந்தே உணவை
முன்னே வந்து பகிர்வாள்
கட்டளைப் போடும் எசமானி
கஷ்டம் வந்தால் உபதேசி
சித்திரை வெயிலாய் சிலநேரம்
சிடுசிடு வென்றே தகதகப்பாள்
ஆனாலும் எப்போதும் அன்பானவள்
அகிலமே வாழ்த்துகின்ற பண்பானவள்
அவளன்றி வாழ்வே இருக்காது
அருகின்றி எனக்கே மகிழ்வேது
(கவியாழியின் மறுபதிவு)
மிகவும் அருமையான காதல் கவிதை!
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றிங்க
Deleteநீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் பதிவினைப் பார்க்கின்றேன் ஐயா
ReplyDeleteமனம் மகிழ்கிறது
நன்றி ஐயா
தம 2
தங்களின் வருகைக்கு நன்றிங்க
Deleteமுக்காலமும் பொருந்துகின்ற கவிதைக்குரியவள் என்பதால் த.ம 3 !
ReplyDeleteதங்களின் வருகைக்கு நன்றிங்க
Deleteஅன்பைப் பொழிபவள் அருகில் இருந்துவிட்டால்
ReplyDeleteதுன்பம் பறக்கும் துவண்டு !
வாழ்த்துக்கள் சகோதரா .
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா....
ReplyDeleteநன்றிங்க நண்பரே
Deleteஎத்தனைமுறை படித்தாலும் சலிக்காத
ReplyDeleteஅற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
உண்மைதான் அய்யா.வருகைக்கு நன்றி
Deleteஅன்பை பொழிப்வ்ள் க்விதை அருமை ஐயா.நலம்தானே?, நீண்ட நாட்களின் பின் தங்களை கான்பதில் சந்தோஸ்ம் ஐயா.
ReplyDeleteஆம் நலமே,இனி தொடர்ந்துவர முயற்சிக்கிறேன்
Deleteஅந்த அவள் யார்? தாங்கள் நேசித்தவரா அல்லது தங்களை நேசித்தவரா? யாராக இருந்தாலும் கவிதை அருமை.
ReplyDeleteஇணையானவள் இனிமையானவள்
Deleteஇல்லாளின் பெருமை சொல்லும் கவிதை! கவிஞருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.9
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அய்யா
Delete