புறப்பட்டு நீ வா !
தேவைக்கதிகமான பணமுண்டு தேடாமல் எல்லாமே வீட்டிலுண்டு பாவைக்கும் நட்பாய் பலருண்டு பார்பவரெல்லாம் நல்லன்பு கொண்டு வீதிக்கு வீதி சிலையுண்டு விடியும்வரை காவலுமுண்டு வெட்டியாய் நாளும் இருப்பதுண்டு வீணே நேரத்தை கழிப்பதுண்டு இத்தனை இருந்தும் எனக்கு இனிமை வாழ்வே அல்ல புத்தகம் எழுதினாலும் பொழுது போகவே இல்ல நித்தமும் அருகில் எனக்கு நிம்மதி வேண்டும் துணைக்கு நினைத்த நேரத்தில் எதையும் நெருங்கி பேச வேண்டும் எத்தனைக் கோடி பணமும் எதற்கு வேண்டும் துணையாய் எண்ணிய நேரத்தில் உரசி எழுந்திட வேண்டும் பேசி வாழ்க்கையை வாழ நீ வா வசந்தத்தை நாடி நீ வா போர்க்களம் காண நீ வா www.kaviyazhi.com புறப்பட்டு கூடவே நீ வா