புறப்பட்டு நீ வா !
தேவைக்கதிகமான பணமுண்டு
தேடாமல் எல்லாமே வீட்டிலுண்டு
பாவைக்கும் நட்பாய் பலருண்டு
பார்பவரெல்லாம் நல்லன்பு கொண்டு
வீதிக்கு வீதி சிலையுண்டு
விடியும்வரை காவலுமுண்டு
வெட்டியாய் நாளும் இருப்பதுண்டு
வீணே நேரத்தை கழிப்பதுண்டு
இத்தனை இருந்தும் எனக்கு
இனிமை வாழ்வே அல்ல
புத்தகம் எழுதினாலும்
பொழுது போகவே இல்ல
நித்தமும் அருகில் எனக்கு
நிம்மதி வேண்டும் துணைக்கு
நினைத்த நேரத்தில் எதையும்
நெருங்கி பேச வேண்டும்
எத்தனைக் கோடி பணமும்
எதற்கு வேண்டும் துணையாய்
எண்ணிய நேரத்தில் உரசி
எழுந்திட வேண்டும் பேசி
வாழ்க்கையை வாழ நீ வா
வசந்தத்தை நாடி நீ வா
போர்க்களம் காண நீ வா
www.kaviyazhi.comபுறப்பட்டு கூடவே நீ வா
தேடாமல் எல்லாமே வீட்டிலுண்டு
பாவைக்கும் நட்பாய் பலருண்டு
பார்பவரெல்லாம் நல்லன்பு கொண்டு
வீதிக்கு வீதி சிலையுண்டு
விடியும்வரை காவலுமுண்டு
வெட்டியாய் நாளும் இருப்பதுண்டு
வீணே நேரத்தை கழிப்பதுண்டு
இத்தனை இருந்தும் எனக்கு
இனிமை வாழ்வே அல்ல
புத்தகம் எழுதினாலும்
பொழுது போகவே இல்ல
நித்தமும் அருகில் எனக்கு
நிம்மதி வேண்டும் துணைக்கு
நினைத்த நேரத்தில் எதையும்
நெருங்கி பேச வேண்டும்
எத்தனைக் கோடி பணமும்
எதற்கு வேண்டும் துணையாய்
எண்ணிய நேரத்தில் உரசி
எழுந்திட வேண்டும் பேசி
வாழ்க்கையை வாழ நீ வா
வசந்தத்தை நாடி நீ வா
போர்க்களம் காண நீ வா
www.kaviyazhi.comபுறப்பட்டு கூடவே நீ வா
ஆம் ! அதுவே நல் துணை !
ReplyDeleteஅருமை !
நன்றிங்க வந்ததுக்கும் உண்மை என்று சொன்னதுக்கும்
Deletewww.kaviyazhi.comபுறப்பட்டு கூடவே நீ வா//
ReplyDeleteமாறுபட்ட அருமையான சிந்தனை
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
நன்றிங்க சார் ,நாளை நமது என்றே சிந்திப்போம்போம்
Deletetha.ma 1
ReplyDeleteஅன்புச் சகோதரரே...
ReplyDeleteகவியாழி அல்லவோ நீங்கள்
புவி ஆளுமே உங்கள் பெருமை
கதி வீணே கலங்குதேனோ உம்
மதி போற்றி வருவார் கூடவே...
நல்ல சிந்தனை. அருமை. ரசித்தேன். பாராட்டுக்கள்!
நன்றிங்க நட்பே ,பெரும்பாலும் அடுத்தவர்களின் வேதனையின் பகிர்வே எனது கவிதைகள் .நிச்சயம் சிலராவது யோசிப்பார்கள்
Delete''..வாழ்க்கையை வாழ நீ வா
ReplyDeleteவசந்தத்தை நாடி நீ வா
போர்க்களம் காண நீ வா...''
good
nalvaalthu..
Vetha.Elangathilakam.
வாழ்த்துக்கு நன்றி ,பணம் இருந்தும் என்ன பயன் துணையின்றி?
Delete//வாழ்க்கையை வாழ நீ வா
ReplyDeleteவசந்தத்தை நாடி நீ வா//
எழுதிய வரிகள் பிரமாதம்.
எடுத்துரைத்த உணர்வு அருமை..
எனினும் இறுதியில்
'போர்க்களம்' காண நீ வா... என்று இயல்பான வாழ்வை உணர்துகிறீர்களா...? இல்லை
'பொற்காலம்' காண நீ வா ... என்று வரவேற்கிறீர்களா..?
எவ்வாறு இருப்பினும் அருமையான வார்த்தை பயன்பாடு. வாழ்த்துகள்...
போர்க்களம் என்பது சரியானதே,அதை மாற்றி யோசித்தால் புரியும் என நம்புகிறேன்.பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதே என் கருத்து.
Deleteபக்கத்தில் துணை இல்லாமல் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய?
ReplyDeleteநல்ல கவிதை, கவிஞரே!
வாழ்த்துகள்!
உண்மை ,பணம் மட்டும் துணையாகிட முடியுமா?
Deleteநன்றிங்கம்மா வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்
அருமையான கவிதை! நன்றி!
ReplyDeleteநன்றிங்க சுரேஷ் .தொடர்ந்து வாங்க ஆதருவு தாங்க
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete//பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதே என் கருத்து.//
ReplyDeleteசத்தியமான வரிகள்... நிறைய பேர்களுக்கு புரிவதில்லை.
தவிர எனது வலைப்பதிவிற்கு வருகை தந்து கருத்துரைத்தமைக்கு நன்றி பல.
http://chitramey.blogspot.in/2013/02/blog-post.html என்ற இப்பதிவிற்கும் வருகை தரும்படி அன்புடன் அழைக்கின்றேன்.
நீகள் சொவது உண்மை பணத்தை சமைத்தா திங்க முடியும் ? உணர்சிகளை விலைக்கு வாங்க முடியுமா?
Deleteநீங்களும் தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
பாட்டுக் கலந்திடவே அங்கே ஒரு பத்தினிப் பெண் வேண்டுமோ!
ReplyDeleteநன்று
எல்லோருமே விரும்புவதுதானே. வந்ததுக்கு நன்றி
Deleteநித்தமும் அருகில் எனக்கு
ReplyDeleteநிம்மதி வேண்டும் துணைக்கு
நினைத்த நேரத்தில் எதையும்
நெருங்கி பேச வேண்டும்
>>
அண்ணி அம்மா வீட்டுக்கு போய் இருக்காங்களா அண்ணி?!
இல்லையே வீட்டில்தான் இருக்கிறார்கள் அங்க போயிட்டு வந்து ரொம்ப நாளாச்சு.
Deleteஇரசிக்க வைத்த சொல்லாடல்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்கயா வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்
Deleteநல்லா இருக்கு. சார்! கலக்குங்க!
ReplyDeleteநன்றிங்க நண்பரே எல்லாம் உங்களைப் பார்த்துதான்
Deleteஇத்தனை இருந்தும் எனக்கு
ReplyDeleteஇனிமை வாழ்வே அல்ல
புத்தகம் எழுதினாலும்
பொழுது போகவே இல்ல
எழுத்தை நேசிக்க துவங்கினால் பொழுது போவது தெரியாது அய்யா.
நான் இதை சொல்லவில்லை சொல்லியவர் விரும்புவதால் இதை சொன்னேன்
Deleteதேவைக்கதிகமான பணமுண்டு
ReplyDeleteதேடாமல் எல்லாமே வீட்டிலுண்டு
பாவைக்கும் நட்பாய் பலருண்டு
பார்பவரெல்லாம் நல்லன்பு கொண்டு
போர்களம் அழைக்கும் கவிதை ..பாராட்டுக்கள்...
எத்தனை இருந்தும் என்ன பயன் நீ அருகில் இல்லாமல் ? உடனே வா உரிமையை தா என்ற கேள்வி நியாம்தானே?
Deleteதாங்கள் வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றி
காதற்களத்தில் ஒரு போர்க்கள கவிதை!
ReplyDeleteஉண்மைதான்,காதலிக்க வாங்க காசுபணம் தேவையில்லை என்று சொல்கிறாள் .
Deleteநீக்ன வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றி
ஆழியிலிருந்து கிளம்பியெழுந்த கவிதை ஊற்று!
ReplyDeleteஅடிமனதில் இடம்பிடிக்குமா?
Deleteநன்றி சேட்டையாரே நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்
நித்தமும் அருகில் எனக்கு
ReplyDeleteநிம்மதி வேண்டும் துணைக்கு
நினைத்த நேரத்தில் எதையும்
நெருங்கி பேச வேண்டும்//
வாழ்க்கை துணை நல்ல நட்பாய் இருக்கும் போது என்ன கவலை?
நினைத்த நேரத்தில் மனம் விட்டு பேச வேண்டியது தான்.
நல்ல கவிதை.
அப்படி இல்லாததுதான் அவளின் ஏக்கம் அதனால்தான் கேட்கிறாள்
Delete