இன்பசுற்றுலா - ஏற்காடு
"ஏழைகளின் ஊட்டி ஏற்காடு " ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் சேலம் நகரிலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருபது கொண்டை ஊசி வளைவுகளுடன் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1850 அடி உயரத்தில் இருக்கிறது ஏற்காடு ஏரியின் எழில் மிகுத் தோற்றம் நான் 1981-1992 வரை ஏற்காடு பகுதியில் நான் பணிபரியும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்தேன்.அன்று பணி நிமித்தமாக நான் சுற்றித் திரிந்த நாட்களில் இருந்த தோற்றம் இன்று காலப்போக்கில் மாறி விட்டது. தற்போது நிறைய தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு போக்குவரத்தும் மிகுதியாகி இருக்கிறது.அதற்கேற்றாற்போல் சாலை வசதியும் மேம்பட்டிருக்கிறது இந்த ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் இருந்து செல்லும் உபரி நீரே கிள்ளியூர் நீர்வீழ்சியாய் கொட்டிக் கொண்டிருந்தது தற்போது ஏரியில் நீர்மட்டம் குறைந்ததும் அருவி இருக்குமிடம் தெரியாமல் கட்டிடங்களாய் மட்டுமே உள்ளது இந்த முகத்துவாரத்தில் உள்ள நீரேற்றும் நிலையத்தின் வாயிலாக இங்குள்ள அனைத்துப் பகுதிகளுக்க