Wednesday, 16 April 2014

இன்பசுற்றுலா - ஏற்காடு
"ஏழைகளின் ஊட்டி ஏற்காடு  "


           ஏழைகளின் ஊட்டி  என்றழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் சேலம் நகரிலிருந்து  முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருபது கொண்டை  ஊசி வளைவுகளுடன்  கடல் மட்டத்திலிருந்து சுமார் 1850  அடி உயரத்தில்  இருக்கிறது


ஏற்காடு  ஏரியின் எழில் மிகுத் தோற்றம்

      நான் 1981-1992 வரை ஏற்காடு பகுதியில் நான் பணிபரியும் யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனத்தின் வளர்ச்சி அதிகாரியாக பணிபுரிந்தேன்.அன்று பணி நிமித்தமாக நான் சுற்றித் திரிந்த நாட்களில் இருந்த தோற்றம் இன்று காலப்போக்கில் மாறி விட்டது. தற்போது நிறைய தங்கும்  விடுதிகள் கட்டப்பட்டு போக்குவரத்தும் மிகுதியாகி இருக்கிறது.அதற்கேற்றாற்போல் சாலை வசதியும் மேம்பட்டிருக்கிறதுஇந்த ஏரியின் நீர்பிடிப்புப் பகுதியில் இருந்து செல்லும் உபரி நீரே கிள்ளியூர் நீர்வீழ்சியாய்  கொட்டிக் கொண்டிருந்தது  தற்போது  ஏரியில் நீர்மட்டம் குறைந்ததும்  அருவி இருக்குமிடம் தெரியாமல் கட்டிடங்களாய் மட்டுமே உள்ளது


        இந்த முகத்துவாரத்தில்  உள்ள நீரேற்றும் நிலையத்தின் வாயிலாக இங்குள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
நீங்கள் காணும் இந்த மரக்கட்டை மிக உயர்ந்த நாவல் பழம் மரமாக இருந்தது .மேலும் ஏரியைச் சுற்றி நிறைய கடுக்காய் மரங்களும் தைலமரங்களும் இருந்தது ஏரியின் அழகை  இன்னும் அதிகரித்திருந்தது.

        தற்போது எல்லாமே மாறி என் பழைய நினைவுகளைப் போல் நிறைய மறைந்துவிட்டது.எனது இளமைக் காலங்களில் இங்கு நான் கண்ட காட்சிகள் பழகிய நட்புகள் இளமைகால நினைவுகள்  என்னை மீண்டும் 24 வருடங்களுக்குப் பிறகு அங்கே அழைத்துச் சென்றது.இரண்டுநாள் தங்கினேன் சில நட்புகளையும் சந்தித்தேன்அந்த இனிய வசந்த காலத்தை மறக்க முடியாமல்  இன்னும் ஒரு தொடராய் எழுதுகிறேன்


(கவியாழி)

14 comments:

 1. இரண்டு வருடங்களுக்கு முன் பார்த்த ஊர் கூட நிறைய மாறிவிட்டது ஐயா... இருபத்து நான்கு வருடங்கள்... இயற்கையை மனிதன் அழித்துவிட்டான்...

  ReplyDelete
 2. அனைத்தும் நம்ம ஆக்கிரமிப்பு தான்...! ம்...

  நட்புகளின் அறிமுகத்தையும் விரைவில் காண ஆவலுடன்...

  ReplyDelete
 3. மறக்க முடியாத நிகழ்வுகள் பல மகிழ்ச்சிக்குப் பதில் மன வருத்தமே கொள்ளச்செய்கிறது.

  ReplyDelete
 4. நெஞ்சோடு நிலைத்திருக்கும் சில நினைவுகள் இப்படி சிதைந்து போனால்
  துன்பமே .நட்பின் தேடல் தொடரவும் தேடிக் கிடைத்த நட்பின் சுகம்
  பெருகவும் வாழ்த்துக்கள் சகோதரா .

  ReplyDelete
 5. The altitude of Yercaud is 1850 Meters, not Feet. Yercaud has really changed a lot. Now more buildings,
  less nature. Still it is the hill station for a common man in
  affordability and is easily reachable.

  Namakkal Venkatachalam

  ReplyDelete
 6. சில மாதங்களிலேயே ஊரின் அடையாளங்களை காணாமல் செய்து விடுகிறார்கள் இப்போது! உங்களின் சுவையான நினைவுகளை படிக்க ஆவலாக உள்ளேன்! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
 7. சிறந்த பகிர்வு

  ReplyDelete
 8. அருமை ஐயா
  தங்களின் வசந்த காலை நினைவலைகளில் மூழ்கக் காத்திருக்கிறேன்

  ReplyDelete
 9. தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து
  tha.ma 8

  ReplyDelete
 10. ஏற்காடு வர தயாராக இருக்கிறோம்.

  ReplyDelete
 11. கல்லூரியில் படித்த காலத்தில் சென்றது..... இன்னமும் பசுமையாக நினைவில்.

  தொடரை எதிர்பார்த்து...

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்