குறள் வெண்பா
ஏனிந்த நாட்கள் இனிமை இழந்திங்கு ? நானெங்குப் போவேன் நவில் பூமானே! பெண்ணே! பூத்தமுதே! வந்தெனக்குத் தா..மானே இன்பம் தழைத்து! திடுக்கிட வைத்த தொடரைப் பார்த்து நடுங்கியே சென்றேன் நகர்ந்து! உறவுகள் சோ்பணம் உள்ளவரைத் சேரும்! சிறப்புகள் போகும் சிதைந்து தலைகுனிந்து நிற்கின்றேன்! தாயே அருள்செய்! நிலையறிந்து காப்பாய் நிலத்து! சொல்லாலே இன்றும் சுடுகின்றாய்! வாழ்நாளில் இல்லா நிலைஇஃது எனக்கு இனத்தின் பெயரால் இடும்பை தொடரும் பணமே படைக்கும் பழி இறைவன் இருந்திங்கு மக்களைக் காத்தால் குறைகள் வருமோ குவிந்து ? தாரணியில் போற்றித் தமிழை வளர்க்கின்ற பாரதி தாசனைப் பாடு!