குறள் வெண்பா
ஏனிந்த
நாட்கள் இனிமை இழந்திங்கு?
நானெங்குப்
போவேன் நவில்
பூமானே!
பெண்ணே! பூத்தமுதே! வந்தெனக்குத்
தா..மானே
இன்பம் தழைத்து!
திடுக்கிட
வைத்த தொடரைப் பார்த்து
நடுங்கியே
சென்றேன் நகர்ந்து!
உறவுகள்
சோ்பணம் உள்ளவரைத் சேரும்!
சிறப்புகள்
போகும் சிதைந்து
தலைகுனிந்து
நிற்கின்றேன்! தாயே அருள்செய்!
நிலையறிந்து
காப்பாய் நிலத்து!
சொல்லாலே
இன்றும் சுடுகின்றாய்! வாழ்நாளில்
இல்லா
நிலைஇஃது எனக்கு
இனத்தின்
பெயரால் இடும்பை தொடரும்
பணமே
படைக்கும் பழி
இறைவன்
இருந்திங்கு மக்களைக் காத்தால்
குறைகள் வருமோ
குவிந்து?
தாரணியில்
போற்றித் தமிழை வளர்க்கின்ற
பாரதி
தாசனைப் பாடு!
அருமை ஐயா... சிறப்பாக முடித்தும் உள்ளீர்கள்...
ReplyDeleteபொறுப்பாகச் கற்றுத்தந்த பாரதிதாசன் அய்யாவே காரணம்
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
சொல்லிச்சென்ற விதமும் முடித்த விதமும் வெகு சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எல்லாம் அய்யா பாரதிதாசன் அவர்களின் வழிகாட்டுதல்தான்
Delete
ReplyDeleteவணக்கம்!
கொட்டிக் கொடுத்த குறள்வெண்பா அத்தனையும்
கட்டிக் கொடுத்த கரும்பு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
திட்டம் போட்டு தீட்டிவிட்டீர் நன்று
ReplyDeleteகெட்டியாக தொடர்வேன் நன்று
Arputham thodara vaazhththukkal
ReplyDeleteஅருமை !அருமை! தொடருங்கள். வாழ்த்துகள்.
ReplyDeleteஇறைவன் இருந்திங்கு மக்களைக் காத்தால்
ReplyDeleteகுறைகள் வருமோ குவிந்து?
எனக்கு பிடித்த குறள். அருமை அத்துனையும். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
குறள் வெண்பாவில் காண்பதெல்லாம்
ReplyDeleteசிறந்த சிந்திக்க வைக்கும் அடிகளே!
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
வணக்கம்
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரா !
கற்றவித்தை கொண்டுலகை காலமெல்லாம் வென்றிடுக
நற்றவம் என்றெண்ணியே நன்கு!
த.ம .7
சிறப்பான வெண்பாக்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை
ReplyDeleteதாரணியில் போற்றித் தமிழை வளர்க்கின்ற
பாரதி தாசனைப் பாடுவோம்
தம +1
தாரணியில் போற்றித் தமிழை வளர்க்கின்ற
ReplyDeleteபாரதி தாசனைப் பாடு!
அன்பின் அருந்தகையீர்!
ReplyDeleteவணக்கம்!
இன்றைய...
வலைச் சரத்திற்கு,
தங்களது
தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!
வருக!
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
கருத்தினை தருக!
நட்புடன்,
புதுவை வேலு
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
ReplyDeleteகருத்தினை தருக
ஆஹா! நவீன குறள் வெண்பாக்கள் அருமை நண்பரே!
ReplyDeleteகுறட்பாக்கள் அருமை
ReplyDelete