தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனிதனை நேசி
மனிதநேயம் கொண்டு மனநிறைவாய் யோசி
நல்லதையே பேசி நாணயமாய்  செய்து- நட்புடன்
 நல்லிணக்கம் உள்ளவனாய் நல்லோரை  யாசி

மரங்களை வளர்த்தால் மழை பெறலாம்
மனதை வளர்த்தால் வளம் பெறலாம்
இழைதலை கொடியால் நிழல் பெறலாம்-எப்போதும்
இனிமையாய் பேசினால் இன்பம் கிடைக்கலாம்

உழுதவன் உழைத்தால் உணவு உண்ணலாம்
உண்மையாய் நடந்தால் உள்ளம் மகிழலாம்
குயவன் செய்வதுபோல் வாழ்வை-குணமாக
குடும்பம் தழைக்க வழி செய்யலாம்

காற்றும் நீரும் மாசு படாமல்
காலை எழுந்ததும் தூசு இல்லாமல்
நேசம் தழைக்க நிம்மதி கொடுக்க-தமிழ்
பாசம் பொங்கம் பண்புடன் வாழ்வீர்

Comments


  1. // மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனிதனை நேசி
    மனிதநேயம் கொண்டு மனநிறைவாய் யோசி
    நல்லதையே பேசி நாணயமாய் செய்து- நட்புடன்
    நல்லிணக்கம் உள்ளவனாய் நல்லோரை யாசி//

    நாளும் மெருகேற நற்கவிதை படைக்கின்றீர்!

    வாழு முறைதன்னை வடித்திட்ட கவிதையிது

    வாழ்க !வளர்க! நன்று!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஐயா. வணங்குகிறேன் நற்றமிழ் கண்டு

      Delete
  2. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
    http://www.dinapathivu.com/
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
    Replies
    1. நன்றி நட்பே,வருகிறேன் அங்கு வருவதால் மகிழ்கிறேன்

      Delete
  3. காற்றும் நீரும் மாசு படாமல்
    காலை எழுந்ததும் தூசு இல்லாமல்
    நேசம் தழைக்க நிம்மதி கொடுக்க-தமிழ்
    பாசம் பொங்கம் பண்புடன் வாழ்வீர்

    வரிக்குவரி மனம் குளிர்ந்தது.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் மனம் குளிர்ந்தது உங்கள் வருகை கண்டு

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more