தெய்வங்கள்

தெய்வங்கள்

தமிழனுக்கு தொடரும் துக்கமடா

சுட்டுவிட துடிக்கின்ற
சூரியனுக்கும் வெட்கமில்லை
எட்டும் திசையும் சென்றாலும்
எங்கெங்கு  காணினும்  வெட்கமடா-இன்னும்
தமிழனுக்கு தொடரும்  துக்கமடா

உன்னை காணாத உயிரில்லை
உள்ளத்தில் வணங்காதவரும் இல்லை
கள்ளத்தனமாய்  செய்கிறான்
கண்டபடி கொல்கிறான்- பக்சேவை
உனக்கு தெரியாதா

இத்தனை நாளாகியும்
இருக்க இடமின்றி
உடுக்க உடையின்றி
உன்னத் துடிக்கும்-தமிழர்கள்
உன்னையும்  வணகுவதாலோ

நீயும் அவனும் சேர்ந்து
நிம்மதி கெடுக்க
நினைக்கும்  செயல் சரியா
நேர்மை தவறல் முறையா-இன்னும்
அவனை ஏன் காக்கிறாய்www.kaviyazhi.com

Comments

 1. வளர்சிகள்
  தென்படுகிறது
  எழுத்தில்
  பசுமையாய்
  உயர்ந்து
  செழிகிறது
  கவிதை
  வாழ்த்துக்களுடன்
  ---- இ .மு .இலக்கியன் !

  ReplyDelete
  Replies
  1. நன்றி இலக்கியன் அவர்களே ,தொடருங்கள் வாழ்த்துங்கள்

   Delete
 2. சுட்டெரிக்க வேண்டாமா?

  ReplyDelete
  Replies
  1. நானும் அதைத்தான் கேட்கிறேன் ,சூரியனுக்கு புத்தி சொல்லுங்கள்

   Delete
 3. வேதனை வரிகள்

  ReplyDelete
  Replies
  1. ம்.. என்ன செய்ய இயலாமையை எண்ணி வருந்தவும் இதுபோன்று எழுதவும் தான் முடிகிறது

   Delete

 4. வணக்கம்

  கமழ்கின்ற கவியாழிக் கண்ண தாசன்
  கண்சிவக்க, உயிர்துடிக்கத் தந்த பாடல்
  உமிழ்கின்ற வாயுடைத்துப் பகையைக் கொல்லும்!
  உறங்குகின்ற தமிழா்களை ஓங்கிக் குத்தும்!
  அமா்கின்ற இடம்கிடைத்தால் அயா்ந்து துஞ்சும்
  அரசியலார் முகத்திரையைக் கிழித்துப் போடும்!
  இமிழ்கின்ற பாட்டெழுதும் கவிஞன் என்றன்
  இதயத்துள் இடம்பிடித்தார்! வளா்க நன்றே!

  கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
  kambane2007@yahoo.fr

  ReplyDelete
 5. கவிஞர் கி.பாரதிதாசன் ஐயா அவர்களுக்கு நன்றி நான் கடந்த சில மாதங்களாய் தான் எழுதி வருகிறேன்
  எனக்கு இப்படியொரு பாராட்டு கிடைத்தது என்னை இன்னும் தரமான கவிதைகளை எழுத உற்சாகபடுத்தும்
  வாழ்த்துக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 6. சூரியச் சூடு கவிதையிலும்..
  மனம் சுட்ட கவிதை
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. மனதிலுள்ள சூடுதான்

   Delete
 7. நன்றிங்க சார் ,உங்களைப்போல உங்களது நண்பரும் கவிஞருமான ஐயா திருவாளர் கி.பாரதிதாசனும் கூறியுள்ளார்

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more