தெய்வங்கள்

தெய்வங்கள்

நீ என்ன சாதி

அறிவுள்ள கணவனே
குடும்பத்தில் ஆண்சாதி
ஆண்மையையும்  அடக்கி
மகிழ்பவளே பெண்சாதி
இயலாமையை சொல்பவர்கள்
இன்னொரு சாதி
இதில் மட்டும்
மாறுபடுமா உன் (நீ) நீதி (தீ)

மதமென்று பிரிக்கிறாய்
குலமென்று இருக்கிறாய்
தளமென்று தனி தேசமாகிறாய்
தரணியிலே தமிழனே என்கிறாய்
என்ன  செய்தாலும்
எதிரியாகி விடுகிறாயே
ஏனோ விளங்கவில்லை
சாதியால்  சதியாகிறாயே ஏன்

உணர்வெனக்கு உண்டென்று
உயிரை கொடுப்பேன்
உலக  தமிழனுக்காய்
உண்மை !,ஆனால்
உரியபதவி தேடித் தேடி
உளருகின்ற வார்த்தையாலே
உள்ளபடி நீயும் அறிவாளியா
உணர்ந்து சொல் மனிதனே

Comments

 1. உணர்வெனக்கு உண்டென்று
  உயிரை கொடுப்பேன்
  உலக தமிழனுக்காய்
  உண்மை !,ஆனால்
  உரியபதவி தேடித் தேடி
  உளருகின்ற வார்த்தையாலே
  உள்ளபடி நீயும் அறிவாளியா
  உணர்ந்து சொல் மனிதனே

  ஆஹா! அருமையான வரிகள் உண்மைதான்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சதிப்பேயை வளர்க்கும் சண்டாளர்களை இனம் கண்டு கொள்ளுங்கள்

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more