தெய்வங்கள்

தெய்வங்கள்

எனக்கு வேண்டும்

 என்கடவுள் பெற்றோரை வணங்க வேண்டும்
எந்நாளும் மறவாதிருக்க வேண்டும்
என்குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்க -எப்போதும்
எல்லாமும் கிடைத்து நிம்மதி வேண்டும்

 பெரியோரை தினமும் மதிக்க வேண்டும்
பிழை இல்லா பேரின்பம் அடைய வேண்டும்
நல்லோரை  மதித்து நல்லாசி வேண்டும்-வாழ்வு
நலமாக நான்வாழ அருள்புரிய வேண்டும்

எல்லோர்க்கும் உதவும் எண்ணம் வேண்டும்
எதிரிக்கும் கெடுதல் செய்யாதிருக்க வேண்டும்
புகழுக்கு  அடிமை ஆகதிருக்க வேண்டும் -பிறந்தாலும்
மீண்டும் தமிழனாய் இருக்க வேண்டும்

எளியோர்க்கும் கல்வி கிடைக்க வேண்டும்
ஏழைகளும் மகிழ்ச்சியாய் சிறக்க வேண்டும்
என்னால் முடிந்தால் உதவ வேண்டும்-இப்பிறப்பில்
எப்போதும் மனிதம் போற்றி வாழ வேண்டும்
www,kaviyazhi,com

Comments

 1. எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுகிறீர்கள்..சிறப்பு

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் விரும்படி இருக்க வேண்டும் உண்மைதானே கவிஞரே

   Delete
 2. உங்களை நேரடியாகச் சந்தித்து
  அளவளாவியதில் இருந்து உங்கள்
  வேண்டுதல்கள் இப்படித்தான் இருக்கும் என்பதை
  திட்டவட்டமாக அறிந்து கொண்டவன் நான்
  அனைவரின் "வேண்டும்களும் " இப்படியிருக்க
  ஆண்டவன் அருள்வானாக

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்.நான் தற்போது www,kaviyazhi.com என்று ஆரம்பிக்க உள்ளேன் .இப்போது அதைத்தான் பதிவிட்டுளேன்.உங்களின் வாழ்த்துக்கு நன்றி

   Delete
 3. அழகான வரிகள்
  சிந்தனைத் துளிகளாகவே எடுத்துக் கொள்ளலாம்

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே,நல்ல யோசனை

   Delete
 4. arumaiyaana thaththuva varikal.. vaalththukkal

  ReplyDelete
 5. Replies
  1. மிகவும் அருமையான நல்லெண்ணங்களின் வெளிப்பாடாக அமைந்துள்ளது இந்தக்கவிதை வரிகள்.
   பாராட்டுக்கள்.

   Delete
  2. பாராட்டுக்கு நன்றிங்க சார்,எண்ணம் சிறப்பானால் எல்லாமே சிறப்பாகும் உண்மைதானே

   Delete
 6. எளியோர்க்கும் கல்வி கிடைக்க வேண்டும்
  ஏழைகளும் மகிழ்ச்சியாய் சிறக்க வேண்டும்
  என்னால் முடிந்தால் உதவ வேண்டும்-இப்பிறப்பில்
  எப்போதும் மனிதம் போற்றி வாழ வேண்டும்..

  வேண்டுவன எல்லாம் சிறப்பு தான்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நட்பே ,வருகைக்கும்,தருகைக்கும்

   Delete

 7. உள்ளுவ தெல்லாம் உயர் உள்ளல் என்பதற்கு ஏற்ப தங்கள் கவிதை அருமை!

  ReplyDelete
 8. நன்றி ஐயா உயர்ந்த உள்ளம் உங்களைப்போல் வேண்டுகிறேன்

  ReplyDelete
 9. சிறந்த படைப்பாக்கம் சார்

  ReplyDelete
  Replies
  1. தகளின் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

   Delete
 10. கவிதை நன்று தங்கள் வேண்டுதல்கள் நன்று தாங்கள் இப்புவியில் வாழ்க நன்று!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி வாழ்த்து தந்தமை நன்று

   Delete
 11. நல்ல நல்ல வேண்டுதல்கள்...
  அனைத்தும் கிடைக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 12. ஆஹா! ஒவ்வொரு வரியும் மனதில் பதிய வேண்டும் என்று நினைக்கிறேன், அத்தனையும் அற்புதமான வரிகள். மிகவும் ரசித்தேன்.

  ReplyDelete
 13. உங்களின் ரசனை தொடரட்டும்

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more