சின்னஞ் சிறு விதைகள்
கெடுத்து வாழ்வதால் கிடைக்காது நட்பு கொடுத்து வாழ்வதால் குறையாது அன்பு ***** உழைப்பவன் வாழ்வு ஊமையாகி விடாது உழைக்காமல் என்றும் உயர்ந்துவிட முடியாது ***** நேர்மையாய் வாழ்பவன் நிம்மதியாய் தூங்குவான் நெறிகெட்டு வாழ்பவன் நீண்ட நேரம் தேடுவான் ***** ஏழைக்கு கிடைக்கும் எப்போதும் நிம்மதி என்றெண்ணி வாழ்வதாலே ஏற்றமில்லை சந்ததி ****** கூட்டுக் குடும்பம் குலம் சிறக்க வாழும் கூடாவிட்டால் ஒற்றுமை நெறிகெட்டுப் போகும் ***** கற்றக் கல்வி கடைசிவரைக் காக்கும் கற்காவிட்டால் அதுவே காலங்காலமாய் ஏக்கம் ****** (கவியாழி)