சின்னஞ் சிறு விதைகள்
கெடுத்து வாழ்வதால்
கிடைக்காது நட்பு
கொடுத்து வாழ்வதால்
குறையாது அன்பு
*****
உழைப்பவன் வாழ்வு
ஊமையாகி விடாது
உழைக்காமல் என்றும்
உயர்ந்துவிட முடியாது
*****
நேர்மையாய் வாழ்பவன்
நிம்மதியாய் தூங்குவான்
நெறிகெட்டு வாழ்பவன்
நீண்ட நேரம் தேடுவான்
*****
ஏழைக்கு கிடைக்கும்
எப்போதும் நிம்மதி
என்றெண்ணி வாழ்வதாலே
ஏற்றமில்லை சந்ததி
******
கூட்டுக் குடும்பம்
குலம் சிறக்க வாழும்
கூடாவிட்டால் ஒற்றுமை
நெறிகெட்டுப் போகும்
*****
கற்றக் கல்வி
கடைசிவரைக் காக்கும்
கற்காவிட்டால் அதுவே
காலங்காலமாய் ஏக்கம்
******
(கவியாழி)
கிடைக்காது நட்பு
கொடுத்து வாழ்வதால்
குறையாது அன்பு
*****
உழைப்பவன் வாழ்வு
ஊமையாகி விடாது
உழைக்காமல் என்றும்
உயர்ந்துவிட முடியாது
*****
நேர்மையாய் வாழ்பவன்
நிம்மதியாய் தூங்குவான்
நெறிகெட்டு வாழ்பவன்
நீண்ட நேரம் தேடுவான்
*****
ஏழைக்கு கிடைக்கும்
எப்போதும் நிம்மதி
என்றெண்ணி வாழ்வதாலே
ஏற்றமில்லை சந்ததி
******
கூட்டுக் குடும்பம்
குலம் சிறக்க வாழும்
கூடாவிட்டால் ஒற்றுமை
நெறிகெட்டுப் போகும்
*****
கற்றக் கல்வி
கடைசிவரைக் காக்கும்
கற்காவிட்டால் அதுவே
காலங்காலமாய் ஏக்கம்
******
(கவியாழி)
வணக்கம் சகோதரரே... அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!
ReplyDeleteசின்னஞ்சிறிதென்று இங்கு சிதறிய வித்து
பென்னம்பெரியதாக பகர்ந்ததே சத்து
முன்னம் உரைத்த அருமையான முத்து
இன்னும் ஏதுஉண்டு? அத்தனையும் சொத்து!.
உங்கள் கவிதை அதைவிட அருமை.மிக்க மகிழ்ச்சி
Deleteகற்றக் கல்வி
ReplyDeleteகடைசிவரைக் காக்கும்
கற்காவிட்டால் அதுவே
காலங்காலமாய் ஏக்கம்
உண்மைதான் நண்ப!
நண்பனாக ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி அய்யா
Deleteசின்னஞ்சிறு விதைகள் முளைத்து வளர்ந்து மரமாக வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கும் வந்தமைக்கும் நன்றிங்க
Deleteகற்றக் கல்வி
ReplyDeleteகடைசிவரைக் காக்கும்
கற்காவிட்டால் அதுவே
காலங்காலமாய் ஏக்கம்//
//
உண்மை ! நன்றாக சொன்னீர்கள் .
நன்றிங்க.நாட்டில் நடப்பதைத்தானே சொன்னேன்
Deleteஅருமையாக முடித்துள்ளீர்கள்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
ரசித்தமைக்கு நன்றிங்க தனபாலன்.
Deleteயாரால் நிம்மதியாக தூங்க முடியும் அருமையா சொல்லிடீங்க
ReplyDeleteஅவசியமான அனைத்தையும் படித்து கருத்திட்டமைக்கு நன்றி
Deleteசரளமான வார்த்தைப் பிரயோகத்துடன்
ReplyDeleteஅருமையான கருத்துடன் கூடிய
அருமையான பதிவு
வாழ்த்துக்கள்
வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றிங்க சார்
Deleteகெடுத்து வாழ்வதால்
ReplyDeleteகிடைக்காது நட்பு
கொடுத்து வாழ்வதால்
குறையாது அன்பு
அழகிய கவிதை ..........வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
வாழ்த்துக்கு நன்றிங்க சீராளன்
ReplyDeleteகவிதை அருமை..
ReplyDeleteநன்றிங்க கருண்.
Deleteமனதில் விதைத்த விதைகள்
ReplyDeleteவித்தக கவிதைகள்...அருமை
நன்றிங்க நீங்க வந்ததுக்கும் கருத்துத் தந்ததுக்கும்
Deleteசின்னஞ்சிறு விதைகள் ஆலமர விழுதாய் பதிந்தது மனதில் .
ReplyDeleteநன்றிங்க சசிகலா .தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Deleteஅருமை.
ReplyDeleteநன்றிங்க ராமலக்ஷ்மி
Delete