தெய்வங்கள்

தெய்வங்கள்

பாவி என்றால் யார்?

           பொதுவாக வழக்கத்தில் எல்லோருமே சொல்லக்கூடிய இந்த வார்த்தை ஆச்சர்யமாக வழக்கத்தில் சொல்வது.இதன் உண்மையான முழுப்பொருளும் தெரியுமா? பெரும்பாலும் எல்லோராலும் இவ்வார்த்தை தவிர்க்க முடியாத வார்த்தையாகி விட்டது.

           அடப்பாவமே ,அடப்பாவி ,அடிப்பாவியே  என்று யாரையெல்லாம் அழைக்கிறோம் ஏன்? அவ்வாறு அழைக்கிறோம்  பாவி என்றால் என்ன பொருள்? என்ன அர்த்தம் ?. அடப்பாவமே என்றால் வருத்தப் படுவதாகவும்,
அடப்பாவி என்று கொடுஞ்சொல்லால்  திட்டுவதுபோலவும் அடிப்பாவியே எனும்போது மட்டும் தவறு செய்ததாக சொல்லுவதாயும் அழைப்பதேன் ?

        பாவி,படுபாவி ,கொடும்பாவி என்று திட்டுவதற்கும் சொல்வழக்கம் உண்டு .ஏன் இங்கு திட்டுவதற்கு பாவி,படுபாவி,கொடும்பாவி என்று சொல்லுகிறோம் இதெல்லாம் எனக்கு விளங்கவில்லை  ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனி அர்த்தங்கள் இருந்தாலும் எல்லா வார்த்தைகளும் தவறான அர்த்தத்தை கொடுப்பதேன்.

        தெரிந்தால் சொல்லுங்கள் அல்லது எனக்கு தெரிந்தப் பின்னர் நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்

Comments

  1. புறநானூற்றில் வரும் பெண்பாற் புலவர்களுள் லெளகீக ஆகாவதங்களைப் பற்றிஅதிகப் பாடல்கள் பாடியவர்கள் ஒளவையாரும் மாறோகத்து நப்பசலையாரும் ஆவர். அவர்கள் பாடு பொருளை ஆராய்ந்தால் இக் கேள்வியே வாராது.

    எட்டாத உயரத்தில்
    இருக்கும் விண்மீனை
    பார்த்து ஏங்கும்
    நான் பாவியா-இல்லை
    எட்டாத உயரத்தில்
    அதனை வைத்த இறைவனா...!!! என்றான் புதுபேட்டை கவிஞன் ஒருவன்

    சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாகத் திகழ்பவர்கள் தான் பாவிகள்.கிறிஸ்து மனிடர்களின் பாவத்தை மீட்க வந்தார் ஆனால் அவருக்கு சிலுவையைத் தந்தவர் யார் அவர்கள் பாவிகள் இல்லையா ? ஒவ்வொரு நாடும் தாங்கள் செய்த பாவத்தை மறைக்க ஆடுகின்றனர். இலங்கை செய்த பாவத்தை அதைச் சுற்றி இருக்கும் கடல் முழுக்க கரைத்தால் போகுமா ? அப்படியே வைத்துக் கொண்டாலும் அங்கே யார் பாவி........ அரசா இல்லை ஓவ்வொரு சிங்களனுமா....... மாதா வை தரிசிக்க வந்த அன்பான் கிறிஸ்துவ டூரிஸ்ட்களை அடித்தவர்கள் பாவிகளா இல்லையா ? இதை ஏன் பேச மறுக்கிறோம் .பாவிகளை மன்னியுங்கள் "என்று சொன்னால் பாவிகள் திருந்திவிட்டான் என்றால் பாவிகளை மன்னியுங்கள் திருந்தாதவனை எப்படி மன்னிப்பது..யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ,யார் வலைத்தளங்களில் மோசமான கட்டுரை கவிதை எழுதுகிறார்களோ அவர்கள் (மறுமையில்) ... .... பாவிகள் ...

    அமிலத்தை வீசுகின்ற அத்தனை அனிமல்களும் பாவிகள் தானே ? அவர்களுக்கு எதற்கு வழக்கு கண்டதும் சுட வேண்டாமா... ஆந்திராவில் செய்த மாதிரி.

    யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கிறார்களோ அவர்கள் தான் தூய்மையான் மெய்யானவர்கள். மறுமையில் அவர்கள் நிம்மதிபெறுவார்கள்

    கடவுளுக்கு விளங்கும் யார் பாவிகள், யார் அப்பாவிகள் என்று. தீர்ப்பு நாளன்று பார்ப்போம் முடிபை!!

    ஜோஸ்

    ReplyDelete
  2. பொறாமை என்னும் பாவியை வளர விட்டால், ஒருவனது செல்வத்தையும் கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும்படி செய்து, படுபாவியாக்கி விடும்... அந்த கொடும்பாவியை மனதில் தோன்றும் முன்னே எரித்து விட வேண்டும்...

    அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும் (குறள் எண் 168)

    பொறாமையால் இந்த உலகத்தில் உயர்ந்தவர் யாருமே இல்லை... அது இல்லை என்றாலும் தாழ்ந்தும் போவதில்லை...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நண்பர் தனபாலன் அவர்களே.சரியான குரலை தேர்ந்தெடுத்து சரியான நேரத்தில் எனக்கும் தெரிவித்தமைக்கும் குறளுக்கு நீங்கள் காட்டும் அக்கறையை புரிந்துகொள்ள முடிகிறது

      Delete
  3. நானும் பாவிதான் சார். அப்பாவி.. ஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. எல்லோருமேதான் அப்பாவி நண்பரே சிரித்து மழுப்பக் கூடாது

      Delete
  4. பதில் சொல்லுவிங்கன்னு பாத்தா கேள்வி கேக்கறிங்க...

    ReplyDelete
    Replies
    1. நிச்சையம் சொல்வேன் இறுதியில்

      Delete
    2. அப்ப சரிதானுங்க

      Delete
    3. பிழைதிருத்தம்: நிச்சையம் அல்ல நிச்சயம்
      உங்கள் பயண்பாட்டிற்கு வேறு சொற்கள்/கண்டிப்பாக/அறிதியிட்டு/உறுதியாக/தவறாமல்/மறவாமல்

      Delete
    4. நன்றிங்க கணேஷ்

      Delete
    5. மன்னிக்கவும் சார் இந்த கமெண்ட் நான் போடவில்லை. எனக்கும் இந்த கமெண்ட் இடுகிறதுக்கும் சம்மந்தமே இல்லை.

      கணேஷ்

      Delete
  5. தெரியவில்லையே நீங்களே சொல்லிவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கத்திலுள்ள எல்லோருக்கும் தெரிந்ததே நிச்சயம் சொல்கிறேன்

      Delete
  6. அதெல்லாம் பாவியுடைய அடுத்தடுத்த நிலைகள் சார்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,ஆனால் பாவி என்பது யார் ?

      Delete
  7. எனக்கும் இதற்கு என்ன சொல்வதென சொல்லத்தெரியவில்லை. உங்களின் விளக்கத்தைக் காண ஆவலுடையேன்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சொல்வேன் அதற்குமுன்பே வழக்கத்திலுள்ள அர்த்தங்களை தெரிந்துக் கொள்ளுங்களேன்

      Delete
  8. தங்களது வலைப்பதிவு பற்றி இன்றைய வலைச்சரம் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். காண்க.

    ReplyDelete
    Replies
    1. நன்றீங்க சார் என்னை அறிமுகம் செய்த உங்களுக்கும் வலைசரத்துக்கும் நன்றிங்க

      Delete
  9. பாவிகள் நாம் தான்.

    நல்லா பாவித்து எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க சிவகுமாரன்.

      Delete
  10. என்னா திது கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு... பதிலையும் சொன்னா கேட்டுக்குவேன்.

    ReplyDelete
  11. இன்னும் யாருமே சரியான பதிலை சொல்லலியே.

    ReplyDelete
  12. ஒருவருக்குமே உதவி செய்யாமல் தனக்குத்தானே என்று சுய நலத்தோடு இருப்பவன் பாவி என்றும்.தன்னை ஏமாற்ற்றுபவரிடமே மீண்டும் போய் ஏமாறுபவன் அப்பாவி என்றும் . அவ்வாறு ஏமாற்றுவதையே எப்போதும் தொழிலாகக் கொண்டவன் படுபாவி எனறு வழக்கத்தில் கூறப்படுகிறது

    ReplyDelete
  13. கோபம் பாபம் ..சண்டாளம் என்பார்கள்..
    கோபமே பாபம் ..
    கோபப்படுபவனே பாவி ..
    கோபமே பாபம் செய்யத்தூண்டுகிறது...

    ReplyDelete
  14. அப்படிங்களா? உங்களுக்கு முன்பே நான் சொல்லிவிட்டேனே இருந்தாலும் வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more