Showing posts with label /பழமொழிகள்/சமூகம்/வாழ்க்கை. Show all posts
Showing posts with label /பழமொழிகள்/சமூகம்/வாழ்க்கை. Show all posts

Monday, 11 November 2013

இல்லமே மகிழ்ச்சியாய் இருக்கலாம்

நாற்பது வயதானால் நண்பனே
நாவடக்கம் தேவை என்பதால்
நாகரீகம் என்ற பெயரில்
நா சுவைதரும் கொழுப்பும்

நேரம் கடந்த தூக்கமும்
நிம்மதி யில்லா மனமும்
ஆண்மையின் ஆசை துறந்தும்
அலுவலில் பணி அதிகரித்தும்

பணமே  வாழ்க்கை என்ற
பணியில் ஓய்வில்லா உழைப்பும்
பகலிரவு அலைச்சல் இருந்தால்
பசியும் குறைந்தே நோயேமிகும்

நயவஞ்சகம் செய்வோரின் நட்பும்
நலிந்தோரை இழிந்து பேசுதலும்
நல்லோரின் நட்பை மறந்தே
நாளும் குடித்தே இல்லாமல்

இல்லத்தாளுடன் இனிய பிணைப்பும்
இல்லறம் போற்றும் நல்லொழுக்கம்
இணைந்தே  வாழும் குடும்பம்
இன்முகமாய் எப்போதும் இருந்து

தியானமும் தொடர்ந்து செய்து
திடமாய் வாழ யோகக்கலையுடன்
மனமே விரும்பும் கடவுளை
மகிழ்ந்தே வணங்கி வந்தால்

இனமே செழிக்க வளர்க்க
இன்னுமே சிறப்பாய் வாழலாம்
இனிமையாய்   நல்லதைச் செய்யலாம்
இல்லமே  மகிழ்ச்சியாய் இருக்கலாம்````````````````````கவியாழி``````````````````


Sunday, 11 August 2013

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு


"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" இந்த பழமொழியை அறியாதவர் சொல்லாதவர் பெரும்பாலும் இருக்க முடியாது.காரணம் இதன் தனித்துவம் அப்படி.எல்லா விசயங்களிலும் எல்லோரும் சொல்லும்படியாய் இருக்கும்
சாப்பிடும் உணவாக பழமாக மேலும் நட்பாக, எதிரியாக,கோபமாக ,சொல்லாக இருந்தாலும் தொழிலாக ,பயணமாக ,தூக்கமாக ஏக்கமாக இப்படியே நிறைய விசயங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

என்ன இருந்தாலும் தமிழ்ப் பழமொழியை நமது சொல்லாடல் சிறப்பாக சொல்லவே இப்படி பழமொழிகள் மூலம்  நமது முன்னோர்கள் சுருங்க சொல்லி விளங்க வைத்தார்கள்.ஆயிரம் அர்த்தங்களை இரண்டே வரிகளில் ரத்தினச் சுருக்கமாக சொல்லிய நமது வள்ளுவர் பெருமான்கூட இதுபற்றி சொல்லி இருக்கிறார்.

நாம் உண்ணும் உணவு நமது உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது  என்பது உண்மைதான்.அதற்காக எப்போதும் எல்லா உணவு வகைகளையும் பிடிபிடியென்று சாப்பிட்டு  விட்டால் செரிமானம் செய்ய நேரமும் காலமும் இருக்காது அதனால்தான் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவயங்களைப் பாதிக்கிறது என்பது எவ்வளவு உண்மை.

அதுபோலவே பணம் பணம் பணம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் முடிவு என்பது நமது என்னத்தைப் பொறுத்தது.தேவை தேவையென்று கடுமையாக உழைத்து சேர்த்தாலும் அதை உடனே பயன்படுத்தா விட்டால் உங்களின் உழைப்பு வீணாகிவிடும்.ஆனால் பணம் மட்டும்  பத்திரமாக இருக்கும்.அதைக் காப்பாற்ற பெரும் பாடுபட வேண்டும் .சேமிப்பைத் தாண்டி பணம் சேர்த்தால் அதுவே கவலையும் மனகுழப்பத்தையும் சேர்த்து விடும்.

சொல்லுமே அளவாக இருக்கவேண்டும்.அது அடுத்தவரின் மனத்தைக் காயப்படுத்தும்படியோ .ஏளனப்படுத்தியோ அவதூறாகவோ சொல்லக் கூடாது.வயதுக்கு மீறியும்  பேசக்கூடாது.தகுதியறிந்து பேசுதல் நலம்.பெரியோர்களிடம் பேசும்போது அடக்கத்துடனும் மரியாதையுடனும் நடந்துகொள்ள தெரிந்திருக்க வேண்டும்.இல்லையெனில் அவர்தம் பெற்றோர்கள் சரியாக வளர்க்கவில்லை என்ற தவறான எண்ணம் வரும்

எனவே உணவாகினும், பணமாகினும், பிள்ளைகளாகினும், செல்வங்களும் அளவோடு இருந்தால் வாழ்க்கைக்கு நிம்மதி அளவுக்கு மீறினால் அதைக் காக்கவே நேரம் சரியாகி விடும் உறக்கம் கவலை நோய்கள் வந்து சேரும் .இறுதி நாட்களில் நிம்மதியில்லா நிலை ஏற்படும். அனவே அளவோடு வாழுங்கள் ஆனந்தமாய் மகிழுங்கள்.