தெய்வங்கள்

தெய்வங்கள்

இல்லமே மகிழ்ச்சியாய் இருக்கலாம்

நாற்பது வயதானால் நண்பனே
நாவடக்கம் தேவை என்பதால்
நாகரீகம் என்ற பெயரில்
நா சுவைதரும் கொழுப்பும்

நேரம் கடந்த தூக்கமும்
நிம்மதி யில்லா மனமும்
ஆண்மையின் ஆசை துறந்தும்
அலுவலில் பணி அதிகரித்தும்

பணமே  வாழ்க்கை என்ற
பணியில் ஓய்வில்லா உழைப்பும்
பகலிரவு அலைச்சல் இருந்தால்
பசியும் குறைந்தே நோயேமிகும்

நயவஞ்சகம் செய்வோரின் நட்பும்
நலிந்தோரை இழிந்து பேசுதலும்
நல்லோரின் நட்பை மறந்தே
நாளும் குடித்தே இல்லாமல்

இல்லத்தாளுடன் இனிய பிணைப்பும்
இல்லறம் போற்றும் நல்லொழுக்கம்
இணைந்தே  வாழும் குடும்பம்
இன்முகமாய் எப்போதும் இருந்து

தியானமும் தொடர்ந்து செய்து
திடமாய் வாழ யோகக்கலையுடன்
மனமே விரும்பும் கடவுளை
மகிழ்ந்தே வணங்கி வந்தால்

இனமே செழிக்க வளர்க்க
இன்னுமே சிறப்பாய் வாழலாம்
இனிமையாய்   நல்லதைச் செய்யலாம்
இல்லமே  மகிழ்ச்சியாய் இருக்கலாம்



````````````````````கவியாழி``````````````````






Comments

  1. //பணமே வாழ்க்கை என்ற
    பணியில் ஓய்வில்லா உழைப்பும்
    பகலிரவு அலைச்சல் இருந்தால்
    பசியும் குறைந்தே நோயேமிகும் //

    நன்றாகச் சொன்னீர்கள். பலருடைய நிலைமை இன்று இவ்வாறுதான் இருக்கிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

    ReplyDelete
    Replies
    1. நிறையப்பேர் இதை உணருவதில்லை.தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  2. நாற்ப்பது வயது ஒரு வயதே அல்ல; அந்தக் காலத்தில் அறுபது வயது வாழ்வது இப்போ வயது வாழ்வது மாதிரி!

    [[நாற்பது வயதானால் நண்பனே
    நாவடக்கம் தேவை என்பதால்]]

    நாவடக்கம் என்றும் தேவை!

    தமிழ்மணம் பிளஸ் வோட்டு பிளஸ் +1

    ReplyDelete
  3. வணக்கம்

    கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  4. மகிழ்சியாக வாழ அறிவுறுத்தும் நல்ல கவி.

    ReplyDelete
  5. நாற்பது வயதுக்கு மேல் என்றில்லை சார் எல்லா வயதினரும் கையாள வேண்டிய வழிமுறைகள் இவை.

    ReplyDelete
  6. நாற்பதுகளிலே இந்த அலுப்பா!?

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  7. "இல்லத்தாளுடன் இனிய பிணைப்பும்
    இல்லறம் போற்றும் நல்லொழுக்கம்
    இணைந்தே வாழும் குடும்பம்
    இன்முகமாய் எப்போதும்" வாழும் என்பேன்.
    சிறந்த வழிகாட்டல் பதிவு.

    ReplyDelete
  8. அருமையான அறிவுரை! அழகான கவிதை வடிவில்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  9. அனுபவித்த(க்க) நல்ல அறிவுரை!

    சிறந்த சிந்தனையும் சிறப்பித்த நல்வரிகளும் அருமை!
    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  10. //இனமே செழிக்க வளர்க்க
    இன்னுமே சிறப்பாய் வாழலாம்
    இனிமையாய் நல்லதைச் செய்யலாம்
    இல்லமே மகிழ்ச்சியாய் இருக்கலாம்?// நிச்சயம் தங்கள் அறிவுரை கேட்டால் சிறப்பாய் வாழலாம் எனும் நம்பிக்கை எனக்குண்டு. சிறப்பான சிந்தனை சகோதரரே.. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  11. Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  12. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.....

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றி

      Delete
  13. தங்களின் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  14. நல்ல கருத்து

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more